Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என் குருவே பாஜக தான்.. 2024ல் பிரதமர் வேட்பாளர் பற்றிய கேள்விக்கு ராகுல் சுவாரசிய பதில்.. அடேங்கப்பா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கன்னியாகுமரியில் துவங்கிய பாரத் ஜோடோ யாத்திரை 3 ஆயிரம் கிலோமீட்டர் பயணித்து டெல்லியை அடைந்துள்ளது. இந்நிலையில் தான் ராகுல் காந்தி இன்று டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பாஜக தான் என் குருவாக உள்ளது எனக்கூறிய ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் நீங்களா? என கேட்கப்பட்ட கேள்விக்கு சிரித்தபடி பதில் அளித்து ட்விட்ஸ்ட் செய்தார்.

தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சியை மீட்டெடுக்கும் முயற்சியில் ராகுல் காந்தி ஈடுபட்டுள்ளார். பாஜக வெறுப்பை பரப்பி பிரித்தாளும் சூழ்ச்சி செய்கிறது. இந்தியாவை ஒற்றுமைப்படுத்த வேண்டும் எனக்கூறி ராகுல் காந்தி பாதயாத்திரையை தொடங்கி உள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் 7 ம் தேதி கன்னியாகுமரியில் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை எனும் இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்கினார். இந்த யாத்திரை காஷ்மீர் வரை 12 மாநிலம், 2 யூனியன் பிரதேசம் வழியாக 150 நாட்கள் வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இந்த யாத்திரை 100 நாட்களை தாண்டி உள்ளது.

டெல்லியில் யாத்திரை

டெல்லியில் யாத்திரை

தமிழ்நாட்டில் புறப்பட்டு கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், அரியானாவை கடந்து பதர்பூர் எல்லை வழியாக கடந்த 24ம் தேதி தலைநகர் டெல்லியை அடைந்தது. அங்கு நடந்த பாதயாத்திரையில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

ராகுல் காந்தி பேட்டி

ராகுல் காந்தி பேட்டி

அதன்பிறகு டிசம்பர் 25 முதல் ஜனவரி 2ம் தேதி வரை 9 நாட்கள் பாதயாத்திரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மீண்டும் ராகுல் காந்தி பாதயாத்திரை டெல்லியில் துவங்கி பஞ்சாப் வழியாக ஜம்மு காஷ்மீர் வரை செல்ல உள்ளார். இந்நிலையில் டெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பாரத் ஜோடோ யாத்திரை பற்றி பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். இதுபற்றி ராகுல் காந்தி கூறியதாவது:

உதவி செய்யும் பாஜக

உதவி செய்யும் பாஜக

கன்னியாகுமரியில் நான் பாரத் ஜோடோ யாத்திரையை துவங்கினேன். அப்போது இது வெறும் சாதாரணமான யாத்திரையாக தான் இருந்தது. படிப்படியாக யாத்திரையின் குரல், உணர்வு பற்றிய புரிதலை நாங்கள் அறிந்தோம். இந்த வேளையில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால் அவர்கள் அதிகமாக எங்களை குறிவைக்கும்போது அது வேறு சில வழிகளில் எங்களுக்கு உதவியாக உள்ளது.

பாஜக தான் என் குரு

பாஜக தான் என் குரு


பாஜகவினர் என்னை இன்னும் வலுவாக தாக்கி பேச வேண்டும் என விரும்புகிறேன். இது சித்தாந்த ரீதியாக காங்கிரஸ் கட்சியை மக்கள் புரிந்து கொள்ள வழிவகுக்கும். நான் பாஜகவை எனது குருவாக கருதுகிறேன். எதையெல்லாம் செய்யக்கூடாது என்பதை பாஜகவிடம் கற்றுக்கொண்டே வருகிறேன்.

கதவுகள் திறந்தே இருக்கிறது

கதவுகள் திறந்தே இருக்கிறது

பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்க அனைவருக்கும் கதவுகள் திறந்து உள்ளது. பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்க வரும் யாரையும் நாங்கள் தடுப்பது இல்லை. அகிலேஷ் ஜி (அகிலஷ் யாதவ்) மாயாவதி ஜி (மாயாவதி) உள்பட இந்தியா மீது பற்று கொண்டுள்ள பிறருக்கும், எங்களுக்கும் சித்தாந்த ரீதியாக சில தொடர்புகள் உள்ளன.

பாஜக வெற்றி பெறுவது கடினம்

பாஜக வெற்றி பெறுவது கடினம்

நான் களத்தில் இருந்து நேரடியாக பார்க்கிறேன் என்ற வகையில் ஒன்றை சொல்கிறேன். எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருமித்த பார்வையுடன் ஒன்றிணைந்தால் வரும் தேர்தலில் பாஜக வெற்றி பெறுவது கடினமாகிவிடும். எதிர்க்கட்சிகள் அனைத்தும் களத்தை சரியாக புரிந்து கொண்டு ஒருங்கிணைவது அவசியமாகும். மேலும் பாஜகவுக்கு எதிராக கடும் அதிருப்தி மக்களிடம் நிலவுகிறது.

காங்கிரஸ் கட்சியால் மட்டுமே

காங்கிரஸ் கட்சியால் மட்டுமே

காங்கிரஸ், பாஜக இடையேயான மோதல் என்பது வெறும் அரசியல் சார்ந்தது மட்டுமல்ல. எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசியலுக்கான கொள்கை வேண்டும். இதனை காங்கிரஸ் கட்சியால் மட்டுமே வழங்க முடியும் என்பதோடு பிற எதிர்க்கட்சிகளுக்கு நல்ல நீடித்த உறவு வைத்து கொள்ள முடியும்'' என்றார்.

பிரதமர் வேட்பாளர் நீங்களா?

பிரதமர் வேட்பாளர் நீங்களா?

மேலும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளர் நீங்களா? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு ராகுல் காந்தி, ‛‛மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். வெறுப்புணர்வுக்கு எதிராக கை கோர்க்க வேண்டும். அன்பு நிறைந்த நாடாக இந்தியா இருக்க வேண்டும். தற்போது இதுதான் எனது குறிக்கோள்'' என பதிலளித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+