ஏஆர் ரஹ்மானை போல் வெறுப்பை காட்டுபவர் யாரும் இல்லை.. நடிகை கங்கனா ரனாவத் கடும் அட்டாக்
டெல்லி: ‛‛ஏஆர் ரஹ்மானை போல் பாரபட்சம், வெறுப்பு காட்டும் ஒரு மனிதரை நான் சந்தித்தது இல்லை. நான் இயக்கிய 'எமர்ஜென்சி' படத்தின் கதையை அவரிடம் சொல்ல நான் மிகவும் விரும்பினேன். கதை சொல்வதை விடுங்கள்.. நீங்கள் என்னை சந்திக்கக்கூட மறுத்துவிட்டீர்கள். எதிர்க்கட்சி தலைவர்கள்கூட, படத்தின் சமநிலையான மற்றும் இரக்கமுள்ள அணுகுமுறையைப் பாராட்டி எனக்குப் பாராட்டு கடிதங்களை அனுப்பினர், ஆனால் நீங்கள் உங்கள் வெறுப்பால் குருடாகி விட்டீர்கள்'' என்று கங்கனா ரனாவத் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்து வருபவர் ஏஆர் ரஹ்மான். 2 ஆஸ்கர் விருதுகள் வாங்கி நம் நாட்டுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார். இந்நிலையில் தான் ஏஆர் ரஹ்மான் சமீபத்தில் இண்டர்வியூ ஒன்று வழங்கினார்.

அதில் பாலிவுட் திரைப்படங்கள் பற்றியும், தற்போது பாலிவுட் திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்காதது பற்றியும் விளக்கினார். இதுதொடர்பாக ஏஆர் ரஹ்மான், ‛‛பாலிவுட் திரைத்துறையில் அதிகாரம் என்பது படைப்பாற்றல் இல்லாத நபர்களின் கைகளில் உள்ளது. அவர்கள் தான் முடிவெடுக்கும் இடத்தில் இருக்கிறார்கள். பாலிவுட்டில் மத ரீதியான பாகுபாடுகள் நிலவுததாக செவிவழி செய்தி வந்தது. ஆனால் என் காதுக்கு நேராக எதுவும் நடக்கவில்லை.
நான் சந்தோஷமாக இருக்கிறேன். என் குடும்பத்துடன் ஓய்வெடுக்க எனக்கு அதிக நேரம் கிடைக்கிறது. நான் வேலை தேடி அலைபவன் அல்ல. வேலை என்னைத் தேடி வர வேண்டும். என் நேர்மை எனக்கு வேலையை பெற்றுத் தரும். நான் எதற்குத் தகுதியானவனோ, அது எனக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன்'' என்றார்.
இதில் மத ரீதியான பாகுபாடுகள் நிலவுவதாக ஏஆர் ரஹ்மான் கூறிய கருத்து தான் தற்போது விவாதத்தை கிளப்பி உள்ளார். அவருக்கு ஆதரவாக ஒரு தரப்பினரும், எதிராக இன்னொரு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் ஏஆர் ரஹ்மானை, நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், ‛‛டீயர் ஏஆர் ரஹ்மான் ஜி.. நான் @arrahman ஜி, நான் பாஜகவை ஆதரிப்பதால் திரையுலகில் பாரபட்சம் மற்றும் பாகுபாட்டை எதிர்கொள்கிறேன். ஆனாலும் உங்களை விட அதிக பாரபட்சமும் வெறுப்பும் கொண்ட ஒரு மனிதரை நான்
சந்தித்ததில்லை என்று சொல்ல வேண்டும்.
நான் இயக்கிய 'எமர்ஜென்சி' படத்தின் கதையை உங்களிடம் சொல்ல நான் மிகவும் விரும்பினேன். கதை சொல்வதை விடுங்கள்.. நீங்கள் என்னை சந்திக்கக்கூட மறுத்துவிட்டீர்கள். நீங்கள் ஒரு Propaganda படத்தில் ஒரு பகுதியாக இருக்க விரும்பவில்லை என்று என்னிடம் கூறப்பட்டது. அதேவேளையில் 'எமர்ஜென்சி' படம் அனைத்து விமர்சகர்களாலும் ஒரு தலைசிறந்த படைப்பு என சொல்லப்பட்டது.
எதிர்க்கட்சி தலைவர்கள்கூட, படத்தின் சமநிலையான மற்றும் இரக்கமுள்ள அணுகுமுறையைப் பாராட்டி எனக்குப் பாராட்டு கடிதங்களை அனுப்பினர், ஆனால் நீங்கள் உங்கள் வெறுப்பால் குருடாகி விட்டீர்கள். உங்களுக்காக நான் வருந்துகிறேன்'' என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications