Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இப்படித்தான்.. மாநில வெற்றிகளை நம்பி 2004ல் பாஜக ஓவர் குஷியில் இருந்தது! காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 2004-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் காலத்தை நினைவூட்டும் வகையில் தற்போதைய 2024 லோக்சபா தேர்தல் களம் திரும்பிக் கொண்டிருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

2003, 2004 மற்றும் 2023, 2024 மாநில சட்டசபை தேர்தல் களம், லோக்சபா தேர்தல் களம் பலவிதமான ஒற்றுமைகளைக் கொண்டதாக இருக்கிறது.
1999-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை 5 ஆண்டு காலம் மத்தியில் பாஜக ஆட்சி நடைபெற்றது. 2003-ம் ஆண்டு மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல்களில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது

I.N.D.I.A bloc Confident over 2004 Results may repeat in Lok Sabha Election 2024

2003-ல் 3 மாநில தேர்தல் முடிவுகள்: 2003-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் பாஜக 50 இடங்களில் வென்றது. காங்கிரஸ் கட்சிக்கு 30 இடங்கள்தான் கிடைத்தன. மத்திய பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 230 இடங்களில் பாஜக அதிரடியாக 175 இடங்களைக் கைப்பற்றியது. காங்கிரஸ் வெறும் 38 இடங்களில்தான் வென்றது. ராஜஸ்தானிலும் பாஜக 200 தொகுதிகளில் 120 இடங்களை அள்ளியது. காங்கிரஸுக்கு வெறும் 56 இடங்கள்தான் கிடைத்தன.

முன்கூட்டியே தேர்தல்: 1999-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் செப்டம்பர், அக்டோபரில்தான் நடைபெற்றது. 2004-ம் ஆண்டு லோக்சபா தேர்தலோ முன்கூட்டியே ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்பட்டது. இதற்கு காரணமே மேலே குறிப்பிட்ட இந்தி பெல்ட்/ வட இந்திய மாநிலங்களில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றிதான். அதனால் அப்போது பாஜகவின் Think Tank டீமாக இருந்த பிரமோத் மகாஜன் உள்ளிட்டோர்தான் லோக்சபா தேர்தலை முன்கூட்டியே நடத்தலாம் என யோசனைகளை அள்ளிவிட்டனர். இதனால் வாஜ்பாய் அரசும் லோக்சபா தேர்தலை 6 மாதங்களுக்கு முன்னதாக நடத்தலாம் என முடிவு செய்தது.

இந்தியா ஒளிர்கிறது கோஷம்: இந்தி பெல்ட் மாநிலங்களின் வெற்றியில் துள்ளி குதித்த பாஜக முன்கூட்டியே அறிவிக்கப்பட 2004 தேர்தலை பெரும் நம்பிக்கையுடன் எதிர்கொண்டது. அப்போதுதான் "இந்தியா ஒளிர்கிறது" என்கிற கோஷத்தை வலுவாக முன்வைத்தது பாஜக. நாட்டின் பட்டி தொட்டி எங்கும் பாஜகவின் இந்த கோஷம் அதிதீவிரமாக முன்னெடுத்துச் செல்லப்பட்டது. பாஜகவின் இந்த ஆக்ரோஷமான பிரசாரம் அப்போது காங்கிரஸை பெரும் கலக்கத்தில் மூழ்கடித்துக் கொண்டிருந்தது.

2004-ல் காங்கிரஸ் எழுச்சி: 2004-ம் ஆண்டு லோக்சபா தேர்தலும் நடந்தது. மீண்டும் ஆட்சி அமைப்போம் என்பது பாஜகவின் கனவாக இருந்தது. ஆனால் அதிரிபுதிரியாக அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 145 இடங்களைக் கைப்பற்றியது. முந்தைய தேர்தலை விட 31 இடங்களில் காங்கிரஸ் கூடுதலாகவும் கைப்பற்றியது. பாஜகவோ 1999-ல் பெற்ற 182 இடங்களைப் பெற முடியாமல் 44 தொகுதிகளை இழந்து வெறும் 138 இடங்களில்தான் வென்றது. அத்தேர்தலில் இடதுசாரிகள் 43 தொகுதிகளில் வென்றிருந்தன.

2004 தேர்தலில் பாஜகவுக்கு அதிர்ச்சி: இத்தனைக்கும் 2004 லோக்சபா தேர்தல் கருத்து கணிப்பு அத்தனையுமே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியே மீண்டும் ஆட்சி அமைக்கும் குறைந்தது 230 இடங்கள்; அதிகபட்சம் 278 இடங்கள் என்றெல்லாம் ஆரூடம் கணித்தன. ஆனால் லோக்சபா தேர்தல் முடிவுகள் தலைகீழாக அமைந்தன. காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றியது. 8 ஆண்டுகளுக்குப் பின்னர் இழந்த ஆட்சியை காங்கிரஸ் திரும்ப மீட்டது. 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டுவரை 10 ஆண்டுகள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியே நீடித்தது.

2004 மீண்டும் திரும்பும்?: தற்போதும் 2004 தேர்தல் களத்தைப் போலவே 3 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. 2003-ல் சத்தீஸ்கர், ராஜஸ்தான், மபியில் பாஜக பெற்ற அதே வெற்றியை 2023 தேர்தல்களில் அந்த கட்சி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியைத் தழுவி இருக்கிறது. 2023-ம் ஆண்டு சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் பாஜக 54 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்துள்ளது. காங்கிரஸ் 35 இடங்களில்தான் வென்றது. மத்திய பிரதேசத்தில் 230 தொகுதிகளில் பாஜக 163 இடங்களில் வென்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 66 இடங்கள்தான் கிடைத்தன. ராஜஸ்தானில் பாஜக 115 இடங்களில் வென்று காங்கிரஸிடம் இருந்து ஆட்சியை பறித்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 70 இடங்கள்தான் கிடைத்தன.

தேர்தல் கருத்து கணிப்புகள்: 2003-ல் இந்தி பேசும் மாநிலங்களில் பெற்ற அமோக வெற்றியின் மிதப்பு அப்படியே 2023-ல் இந்தி பேசும் மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ள பாஜகவிடம் இருந்து வருகிறது. இந்த மிதமிஞ்சிய நம்பிக்கையில்தான் 400க்கும் அதிகமான இடங்களைப் பெறுவோம் என்கிறார் பிரதமர் மோடி. கருத்து கணிப்புகள் அனைத்தும் பாஜகவுக்கு 250க்கு மேல் 400 வரை என அள்ளி விட்டுக் கொண்டிருக்கின்றன. 2004 தேர்தல் களத்தில் இந்தியா ஒளிர்கிறது கோஷத்தை எப்படி பாஜக தீவிரப்படுத்தியதோ அதேபோல மீண்டும் மோடி என்கிற முழக்கத்தை பாஜக இப்போது தீவிரமாக்கி வருகிறது. இருப்பினும் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக இருக்குமா? 2004 தேர்தல் முடிவுகளைப் போல் தலைகீழாகிவிடுமா? என்கிற கேள்வி எழாமலும் இல்லை.

நம்பிக்கையில் இந்தியா கூட்டணி: இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் பல கட்சிகள் தேர்தல் களத்தில் எதிரும் புதிருமாக பிரிந்து நிற்க நேரிடும் சூழ்நிலையிலும் "இந்தியா" கூட்டணியிலேயே நீடிப்பதாக அறிவித்தும் கொண்டிருக்கின்றன. தேர்தலுக்கு பிந்தைய கள நிலவரம் வேறு மாதிரியாக அமையவும் சாத்தியங்கள் இருக்கின்றன என்பதையே இந்த நிலைப்பாடுகள் வெளிப்படுத்துகின்றன. லோக்சபா தேர்தலில் பல மாநிலங்களில் மாநில கட்சிகள்தான் அதிகமான இடங்களைக் கைப்பற்றும் என்கின்றன கருத்து கணிப்புகள். இந்த மாநில கட்சிகள் பெரும்பாலும் இந்தியா கூட்டணியில்தான் இருக்கின்றன. வட இந்திய மாநிலங்களில் பாஜக அதிக இடங்களை வென்றாலும் தென்னிந்திய மாநிலங்களில் பாஜக பெரும் தோல்வியைத்தான் தழுவும் என்பது அந்த கட்சியினருக்கே தெரியும். வட இந்திய பாஜகவின் பலம், இந்தியா கூட்டணியில் உள்ள மாநில கட்சிகளின் பலம் ஆகியவை சமநிலையில் உள்ளன. இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கூடுதலாக நிற்கிறது. இதனால் 2004 லோக்சபா தேர்தல் முடிவுகளைப் போல காங்கிரஸ் பக்கம் வெற்றி காற்று சாய்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிற நம்பிக்கையில் இருக்கின்றனர் இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+