முதல்வர் ஸ்டாலின் மீது கோபத்தை கொட்டிய நிதிஷ் குமார்! "இந்தி"யால் "இந்தியா" கூட்டணியில் கடும் பிளவு!
டெல்லி: "இந்தியா" கூட்டணியின் டெல்லி ஆலோசனைக் கூட்டத்தில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற குழு தலைவர் டிஆர் பாலு ஆகியோர் மீது ஜேடியூ தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் கடும் கோபத்தை வெளிப்படுத்தியதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் நேற்று "இந்தியா" கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் "இந்தியா" கூட்டணியில் இடம் பெற்றுள்ள 28 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டிஆர் பாலு எம்பி உள்ளிட்டோரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் ஜேடியூ தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார், அக்கட்சியின் மூத்த தலைவர் மனோஜ் ஜா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் நிதிஷ்குமார் இந்தி மொழியில் பேசத் தொடங்கினார். அப்போது டிஆர் பாலு, நிதிஷ்குமார் இந்தி மொழியில் பேசுவதை மொழிபெயர்த்து சொல்ல வேண்டும் என்றனர். இதையடுத்து மனோஜ் ஜா ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து கொண்டிருந்தார்.
ஆனால் நிதிஷ்குமார் கடும் கோபத்துடன், இந்தி இந்தியாவின் தேசிய மொழி. ஆகையால் திமுக தலைவர்கள் இந்தி மொழியை கற்க வேண்டும். ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை விட்டு போனபோதே அவர்களுடன் ஆங்கிலம் உள்ளிட்ட அனைத்தும் போய்விட்டது என ஆவேசப்பட்டிருக்கிறார். அத்துடன் தமது கட்சியின் மனோஜ் ஜா, தமது இந்தி பேச்சை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததையும் உடனே நிறுத்துமாறு நிதிஷ்குமார் கோபத்துடன் கூறினாராம். இது "இந்தியா" கூட்டணி கூட்டத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதற்கு முந்தைய "இந்தியா" கூட்டணியின் 3 கூட்டங்களிலும் நிதிஷ்குமாரின் இந்தி மொழி பேச்சை மனோஜ் ஜாதான் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். அதனடிப்படையில்தான் இம்முறையும் டிஆர் பாலு ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க வேண்டும் என கேட்டிருக்கிறார். ஆனால் "இந்தியா" கூட்டணி மீது ஏற்கனவே அதிருப்தியில் இருக்கும் நிதிஷ்குமார் தமது கோபத்தை நேற்று திமுக தலைவர்கள் மீது வெளிப்படுத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications