பாவம்யா காங்கிரஸ்! மமதாவை போல மிரட்டும் அகிலேஷ்! உ.பி.யில் சிங்கிள் டிஜிட் தொகுதிதானாம்- தமிழ்நாடு?
டெல்லி: லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 2 இடங்கள்தான் ஒதுக்க முடியும் என திரிணாமுல் காங்கிரஸ் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இதேபோல உத்தரப்பிரதேசத்தில் 20 இடங்கள் கேட்கும் காங்கிரஸுக்கு அதிகபட்சம் 6 தொகுதிகளைத்தான் தர முடியும் என்கிறது சமாஜ்வாதி கட்சி. இதனால் தமிழ்நாட்டில் டபுள் டிஜிட் தொகுதிகள் கனவில் இருக்கும் காங்கிரஸ் பீதியில் உள்ளதாக கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலை எதிர்கொள்வதற்காக "இந்தியா" கூட்டணியில் உள்ள 28 கட்சிகள் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகளை நடத்த தொடங்கிவிட்டன. ஆனால் இந்த பேச்சுவார்த்தையின் தொடக்கத்திலேயே காங்கிரஸ் எதிர்பார்க்காத அளவு பெரும் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறது.

மேற்கு வங்கத்தில் 2 சீட்தான்: மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக இடையேதான் கடும் போட்டி. திரிணாமுல் காங்கிரஸுடன் என்னதான் இந்தியா கூட்டணியில் இருந்தாலும் மேற்கு வங்கத்தில் கூட்டணி அமைக்க முடியாது என்கின்றன இடதுசாரிகள். காங்கிரஸ் கட்சி, திரிணாமுல் காங்கிரஸுடன் இணைந்து நிற்க வேண்டிய நிலை. இம்மாநிலத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் 2019 தேர்தலில் 22 இடங்களில் வென்றது. பாஜக 18 இடங்களைக் கைப்பற்றியது. காங்கிரஸ் 2 இடங்களில் வெற்றி பெற்றது. மேற்கு வங்கத்தை கோட்டையாக வைத்திருந்த இடதுசாரிகள் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. ஆகையால் இந்த தேர்தலில் காங்கிரஸுக்கு 2 தொகுதிகளைத்தான் தர முடியும் என திட்டவட்டமாக சொல்லிவிட்டது திரிணாமுல் காங்கிரஸ்.
உ.பி. நிலவரம்: உத்தரப்பிரதேசத்தைப் பொறுத்தவரையில் அம்மாநிலத்தில் பாஜகவுக்கு எதிரான பிரதான கட்சி சமாஜ்வாதி கட்சிதான். மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 2019 தேர்தலில் பாஜக 62; பகுஜன் சமாஜ் 10; சமாஜ்வாதி கட்சி 5; அப்னா தள்; காங்கிரஸ் 1 இடத்தில் வென்றது. 2019 தேர்தலில் சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, ராஷ்டிரிய லோக் தள் ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட்டன. காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது. இந்த முறை இயல்பாகவே இந்தியா கூட்டணியில் இருப்பதால் சமாஜ்வாதி கட்சியும் காங்கிரஸும் கூட்டணி கட்சிகளாகிவிட்டன. இந்த அணியில் ராஷ்டிரிய லோக் தள் கட்சியும் இணைந்திருக்கிறது.
பழிவாங்கும் சமாஜ்வாதி: சமாஜ்வாதி கட்சியைப் பொறுத்தவரையில் அண்மையில் நடைபெற்ற மத்திய பிரதேச தேர்தலிலேயே காங்கிரஸுடன் கை கோர்க்க முயற்சித்தது. ஆனால் மத்திய பிரதேசத்தில் ஒட்டுமொத்த முஸ்லிம் வாக்குகளும் தங்களுக்கே கிடைக்கும் என்ற மிதப்பில், சமாஜ்வாதி கட்சியை காங்கிரஸ் கழற்றிவிட்டது. இதற்கு பழிதீர்க்க காத்திருக்கிறது சமாஜ்வாதி கட்சி. உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கோட்டையாக இருந்தது எல்லாம் ஒரு காலம். அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியே அமேதி தொகுதியில் தோற்கிற நிலைமைதான். இந்த முறை சோனியா கூட ரேபரேலியில் போட்டியிடுவாரா? என்கிற சந்தேகம்தான். ஆனாலும் காங்கிரஸ் கட்சி 20 முதல் 22 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என சமாஜ்வாதி கட்சியிடம் பேசுகிறது. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியோ காங்கிரஸுக்கு மிக அதிகபட்சம் 6 இடம்தான் என கறாராக சொல்லிவிட்டதாம். இதனால் என்ன முடிவு எடுப்பது என தெரியாமல் உ.பி. காங்கிரசார் குழம்பி போய் இருக்கின்றனராம்.
தமிழ்நாடு: மேற்கு வங்கம், உ.பி.யில் ரொம்பவே அவமானப்பட்டுப் போய் கிடக்கும் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டிலாவது ஆறுதல் கிடைக்குமா? என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 39 தொகுதிகள். 2019 தேர்தலில் திமுக கூட்டணி மொத்தம் 38 தொகுதிகளை அள்ளியது. இதில் திமுக 20, காங்கிரஸ் 8, சிபிஐ 2, சிபிஎம் 2, விசிக 2, முஸ்லிம் லீக் 1, இந்திய ஜனநாயக கட்சி 1, கொமதேக 1, மதிமுக 1 இடங்களில் வென்றன. 2019 தேர்தலில் திமுக கூட்டணியில் 9 இடங்களைப் போராடி பெற்றது காங்கிரஸ். ஆனால் இந்த முறை டபுள் டிஜிட் கேட்கும் தொனியில் இருக்கிறது காங்கிரஸ். திமுகவோ 9 என்பதே ரொம்ப அதிகம்தான். 5 அல்லது 6 தொகுதிகள்தான் என சொல்லக் காத்திருக்கிறது. மேற்கு வங்கம், உபி தொடர்ந்து தமிழ்நாட்டிலும் சிங்கிள் டிஜிட் 'கவுரவம்'தான் என்பது உறுதியானதை காங்கிரஸ் மேலிடம் ஏற்குமா? அல்லது 'இந்தியா' கூட்டணியே கலகலக்குமா? என்பது அடுத்த சில வாரங்களில் தெரிந்துவிடும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications