பதவியேற்ற மறுநாளே ஷாக் கொடுத்த சுரேஷ் கோபி.. மத்திய அமைச்சர் பதவி வேண்டாம்.. பரபர பேட்டி
டெல்லி: கேரள மாநிலத்தில் முதல் முறையாக பாஜகவை காலூன்ற வைத்த நடிகர் சுரேஷ் கோபிக்கு மத்திய இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில், தனக்கு மத்திய அமைச்சர் பொறுப்பு வேண்டாம் என்று பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார். என்னை பொறுப்பில் இருந்து விடுவிப்பார்கள் என நம்புவதாகவும் கூறியுள்ளார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் கேரளாவில் பாஜக ஒரே ஒரு இடம் மட்டுமே வெற்றி பெற்றது. திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட சுரேஷ் கோபி வெற்றி பெற்றார். கேரள மாநிலத்தில் பாஜக வெல்வது இதுவே முதல் முறையாகும். இதற்கு பரிசளிக்கும் விதமாக சுரேஷ் கோபிக்கு மத்திய அமைச்சர் பொறுப்பை பாஜக தலைமை அளித்தது.

எம்.பியாக தேர்வு செய்யப்பட்டதுமே சுரேஷ் கோபி தனக்கு அமைச்சர் பதவியில் நாட்டம் இல்லை என்று கூறியிருந்தார். ஆனால், நேற்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் சுரேஷ் கோபியும் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். பதவியேற்ற ஒரு நாள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் சுரேஷ் கோபி தனக்கு மத்திய இணை அமைச்சர் பொறுப்பு வேண்டாம் எனக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக மலையாள தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சுரேஷ் கோபி கூறுகையில், "மத்திய அமைச்சர் பதவி தனக்கு வேண்டாம். சினிமாவில் நடிக்க இருப்பதால் அமைச்சர் பதவி வேண்டாம் எனக் கூறினேன். மத்திய அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவிப்பார்கள் என நம்புகிறேன்.
அமைச்சர் பதவி வேண்டாம் என முன்பே கூறினேன். ஆனால், பாஜக தலைமை கேட்டுக்கொண்டதால் மறுக்கவில்லை. திருச்சூர் தொகுதி மக்களுக்காக ஒரு எம்.பியாக தொடர்ந்து பணியாற்றுவேன்" என்றார்.
கேரளாவி முதல் முறை கால் பதித்த பாஜக: கேரளாவில் 1957 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வரும் லோக்சபா தேர்தல்களில் 2024க்கு முன்பு வரை பாஜக எந்த தொகுதியிலும் வெற்றி பெற்றது கிடையாது. ஆனால் முதல் முறையாக 2024 லோக்சபா தேர்தலில் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. பாஜக சார்பில் போட்டியிட்ட சுரேஷ் கோபி முதல் முறையாக நாடாளுமன்றத்திற்கு செல்கிறார்.
அதேபோல அவருக்கு மத்திய அமைச்சராவையிலும் இடம் வழங்கப்பட்டிருக்கிறது. திருச்சூர் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சிபிஐ வேட்பாளரை 74 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சுரேஷ் கோபி தோற்கடித்திருக்கிறார். இந்த வெற்றி மூலம் முதல் முறையாக பாஜக கேரளாவில் காலூன்றியிருக்கிறது. இதற்கு பரிசாகவே சுரேஷ் கோபிக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications