Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.150 கோடி லஞ்சம்.. ஐசியூவில் இருந்து ஜம்மு காஷ்மீர் மாஜி ஆளுநர் சத்யபால் மாலிக் சொன்ன ஷாக் தகவல்

Subscribe to Oneindia Tamil

ஜம்மு காஷ்மீர்: புல்வாமா தாக்குதல் சம்பவம் தொடர்பாக மத்திய பாஜக அரசு மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை ஜம்மு காஷ்மீரின் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் முன்வைத்து வருகிறார். சமீபத்தில் சிபிஐ ரெய்டு நடத்தப்பட்ட நிலையில் மத்திய அரசு மிரட்டுவதாக தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தான் சிறுநீரக பிரச்சனையால் ஐசியூவில் அட்மிட் செய்யப்பட்டுள்ள சத்யாபால் மாலிக் தனது எக்ஸ் பக்கத்தில் பரபரப்பான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக். இவர் ஜம்மு காஷ்மீர் மாநிலமாக இருந்தபோது 2018-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை ஆளுநராக பதவி வகித்தார். அதன்பிறகு டெல்லியில் வசித்து வருகிறார்.

i-was-offered-bribes-of-rs-150-crores-says-ex-j-k-governor-satypal-malik-after-admitted-to-icu

இதற்கிடையே தான் கடந்த ஒரு மாதமாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரக பிரச்சனையால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் மே மாதம் 11ம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளது. இவர் டயாலிசிஸ் சிகிச்சையில் உள்ளார்.

இந்நிலையில் தான் சத்யபால் மாலிக் தனது எக்ஸ் பக்கத்தில் பரபரப்பான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த பதிவில் சத்யபால் மாலிக், ‛‛ஹலோ நண்பர்களே.. சிறுநீரக பிரச்சனையால் (kidney Problems)நான் கடந்த ஒரு மாதமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். நான் நேற்று முன்தினம் வரை நலமாக இருந்தேன். ஆனால் இன்று நான் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்.

எனது உடல்நிலை மிகவும் மோசமாகி வருகிறது. நான் வாழலாம். இல்லாவிட்டால் சாகலாம். இதனால் நான் நாட்டு மக்களுக்கு உண்மையை சொல்ல விரும்புகிறேன். நான் ஆளுநராக பொறுப்பு வகித்தபோது எனக்கு ரூ.150 கோடி லஞ்சம் தருவதாக கூறினார்கள். ஆனால் நான் எனது அரசியல் குருவான மறைந்த சவுத்ரி சரண் சிங்கை போல் தொடர்ந்து நேர்மையாக பணி செய்தேன். அவரால் எனது நேர்மையை அசைக்க முடியவில்லை.

நான் ஆளுநராக இருந்தபோது விவசாயிகளின் இயக்கமும் (Farmers Movement) நடந்து கொண்டிருந்தது. எந்தவொரு அரசியல் பேராசையும் இல்லாமல், பதவியில் இருந்தபோது விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு குரல் கொடுத்தேன்'' என்று கூறியுள்ளார்.

அதாவது சத்யபால் மாலிக் ஜம்மு காஷ்மீர் ஆளுநராக இருந்த சமயத்தில் மத்திய அரசுக்கு எதிராக நாட்டில் விவசாயிகள் போராட்டங்களை மேற்கொண்டனர். சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில் நிலையான மற்றும் நியாயமான வருமானத்தை உறுதி செய்வதற்காக அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் கோரி இந்தியாவில் விவசாயிகள் முதன்மையாக போராட்டம் நடத்தினர். மேலும் கடன் தள்ளுபடி, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல் உள்ளிட்டவற்றை நிறைவேற்ற வலியுறுத்தினர். இதற்கு சத்யபால் மாலிக் ஆதரவு தெரிவித்து இருந்தார்.

மேலும் புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் இறந்தனர். அவர்களுக்கு விமானம் வழங்க மத்திய அரசு மறுத்ததாக சத்யபால் மாலிக் தெரிவித்து இருந்தார். அதன்பிறகு புல்வாமா தாக்குதலுக்கு மத்திய பாஜக அரசுதான் காரணம் என கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்ட சத்யபால் மாலிக் வீட்டில் தற்போது சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது.

அவரது பதவி காலத்தில் கிரு நீர்மினிட்ட ஒப்பந்தத்துக்காக ரூ300 கோடி ஊழல் முறைகேடு,செனாப் ஆற்றின் குறுக்கே கிஸ்த்வார் மாவட்டத்தில் 624 மெகாவாட் கிரு நீர்மின்சாரத் திட்டத்தை மேற்கொள்ள ஒப்பந்ததாரர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டது. அவரது வீட்டில் ரெய்டு நடத்தப்பட்து. இதையடுத்து மத்திய அரசு சிபிஐ வைத்து மிரட்டுவதாக குற்றம்சாட்டியிருந்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது ரூ.150 கோடியை தனக்கு லஞ்சமாக வழங்க ஆஃபர் வந்ததாக தெரிவித்துள்ளார்.இருப்பினும் அதனை யார் வழங்க முன்வந்தனர் என்பது பற்றி அவர் தெரிவிக்கவில்லை.

முன்னதாக கடந்த மே மாதம் 23ம் தேதி ராகுல் காந்தி, சத்யபால் மாலிக்கை மருத்துவமனையில் வைத்து சந்தித்தார். இதுபற்றி ராகுல் காந்தி,‛‛இன்று நான் முன்னாள் ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக்கை ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் சந்தித்து அவரது உடல்நிலை குறித்து விசாரித்தேன். அவர் விரைவில் குணமடைவார் என்று நம்புகிறேன். உண்மைக்கான இந்தப் போராட்டத்தில் நான் அவருடன் நிற்கிறேன்" என்று கூறியிருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+