‛‛உங்களை விட்டு இனி போகமாட்டேன்’’.. மோடியிடம் வருத்தப்பட்ட நிதிஷ் குமார்! சந்திப்பில் என்ன நடந்தது
டெல்லி: ‛இந்தியா' கூட்டணியில் இருந்து விலகி மீண்டும் பாஜகவுடன் கைகோர்த்து பீகார் முதல்வராக நிதிஷ் குமார் பொறுப்பேற்றார். கூட்டணி மாற்றத்துக்கு பிறகு முதல் முறையாக நிதிஷ் குமார் நேற்று பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து பேசினார். இந்த வேளையில் நிதிஷ் குமார் பிரதமர் மோடியிடம் சில முக்கிய வாக்குறுதிகளை அளித்ததோடும், வருத்தத்தையும் தெரிவித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
பீகாரில் கடந்த 2020ல் சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் (ஜேடியூ), பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. நிதிஷ் குமார் முதல்வரானார். 2 ஆண்டு ஆட்சிக்கு பிறகு அவர் பாஜக கூட்டணியை விட்டு வெளியேறினார்.

இதையடுத்து நிதிஷ் குமார் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம், காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து மீண்டும் முதல்வரானார். இந்நிலையில் தான் சமீபத்தில் இந்த கூட்டணியை நிதிஷ் குமார் உடைத்து வெளியேறினார்.
மீண்டும் நிதிஷ் குமார் பாஜகவுடன் கூட்டணி அமைத்து 9வது முறையாக பீகார் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பு செய்த நிதிஷ் குமார் ‛இந்தியா' கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் மற்றும் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவி மீது கண்வைத்தார். இந்த பொறுப்பு வழங்கப்படாத சூழலில் நிதிஷ் குமார் ராஷ்ட்ரிய ஜனதாதளம், காங்கிரஸ் உடனான கூட்டணியை முறித்து மீண்டும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) இணைந்துள்ளார்.
இந்நிலையில் தான் பாஜக கூட்டணியில் இணைந்த பிறகு முதல் முறையாக நிதிஷ் குமார் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். டெல்லியில் இந்த சந்திப்பு நடந்தது. நிதிஷ் குமார் தலைமையிலான புதிய அரசு வரும் 12-ம் தேதி பிஹார் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ளது. இதை முன்னிட்டு அவர் பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த வேளையில், ‛‛இனி வரும் காலத்தில் என்டிஏ கூட்டணியை விட்டு ஒருபோதும் வெளியேற மாட்டேன்' என பிரதமர் மோடியிடம் நிதிஷ் குமார் உறுதியளித்ததோடு, கூட்டணியை விட்டு வெளியேறியதற்கு வருத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் பீகார் மாநிலத்தில் 6 ராஜ்யசபா எம்பிக்களின் பதவிக்காலம் முடிவுக்கு வர உள்ளது. இதற்கான தேர்தல் என்பது வரும் 27 ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து அந்த பொறுப்புகளில் வேட்பாளர்களை நிறுத்துவது தொடர்பாகவும் அவர்கள் விவாதித்தனர். இதையடுத்து நிதிஷ் குமார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோரையும் சந்தித்து பேசினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications