இப்படியா லீவு கேட்பாங்க.. Gen Z ஊழியரின் வாட்ஸ்அப் மெசேஜை பாருங்க.. ஆனாலும் பாராட்டிய ‛பாஸ்'.. பின்னணி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ‛‛எனக்கு கண் எரிச்சல் உள்ளது. இதனால் என்னால் இன்று வேலை செய்ய முடியாது'' என்று Gen Z ஊழியர் தனது பாஸ்க்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பி விடுமுறை கேட்டார். அதற்கு அடுத்த நிமிடமே அனுமதி கிடைத்தது. இந்நிலையில் தான் இந்த வாட்ஸ்அப் உரையாடல் தொடர்பான பதிவை ‛பாஸ்' தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு உண்மையிலேயே Gen Z ஊழியர்கள் நேர்மையானவர்கள் என்று பாராட்டிய நிலையில் ஒரு தரப்பினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

பொதுவாக நாம் அலுவலகங்களில் விடுமுறை கேட்கும்போது உடல்நலம் சரியில்லை. உறவினர் காலமாகிவிட்டார். திருமண விழா உள்ளது என்று பல்வேறு காரணங்களை கூறுவோம். இதில் எந்த காரணமாக இருந்தாலும் சரி..

i-wont-be-able-to-work-today-my-eyes-are-burning-gen-z-employee-seeks-leave-and-boss-says-this

நாம் அனுப்பும் வாட்ஸ்அப் மெசேஜ் அல்லது இ-மெயிலில் ‛சார்/மேடம்' என்ற வார்த்தை கட்டாயம் இருக்கும். நம்முடைய பாஸ், டீம் லீட் அல்லது மேனேஜரிடம் விடுமுறை கேட்பதால் தான் இந்த மரியாதை.

இப்படி மரியாதை கொடுத்து விடுமுறை கேட்டாலும் கூட பலருக்கும் அனுமதி கிடைப்பது இல்லை. ஆனால், Gen Z தலைமுறையை சேர்ந்த ஊழியர் ஒருவர் தனது பாஸிடம் எந்த மரியாதை சொல்லையும் பயன்படுத்தாமல் விடுப்பு கேட்டு அதனை ஓகே செய்திருப்பது அனைவரையும் கவர்ந்துள்ளது.

அதாவது உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் ஸ்வப்னில் ஸ்ரீவத்சா என்பவர் ஸ்டார்ட்அப் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் Gen Z தலைமுறையை சேர்ந்த இளைஞர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தான் நேற்று முன்தினம் Gen Z தலைமுறையை சேர்ந்த ஊழியர் ஒருவர், ஸ்வப்னில் ஸ்ரீவத்சாவிடம் விடுமுறை கேட்டதும், அதுதொடர்பாக ஸ்வப்னில் ஸ்ரீவத்சா போட்ட பதிவும் தற்போது கவனம் பெற்றுள்ளது.

அதாவது Gen Z ஊழியர் நேரடியாக ஸ்வப்னில் ஸ்ரீவத்சாவிடம் வாட்ஸ்அப்பில், ‛‛ என்னால் இன்று பணிக்கு வர முடியாது. எனக்கு கண்கள் எரிகிறது'' என்று கூறியுள்ளார். இதையடுத்து ஸ்வப்னில் ஸ்ரீவத்சா, ‛‛ஓகே'' என்று கூறியுள்ளார். இதனை ஸ்கிரின்ஷாட் எடுத்துள்ள ஸ்வப்னில் ஸ்ரீவத்சா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், ‛‛டெல்லியில் கடும் காற்று மாசுபாடு உள்ளது. இதற்கு இடையே ஊழியரிடம் இருந்து நான் உத்தரவு பெற்றேன். உண்மையிலேயே Gen Z தலைமுறையினர் ஸ்ட்ரேட்பார்வர்ட்'' என கூறியுள்ளார். அதாவது விடுமுறை கேட்கும்போது பயன்படுத்தப்படும் சார் என்ற வார்த்தையை எதுவும் பயன்படுத்தாமல் தனக்கு கண்கள் எரிகிறது. இதனால் அலுவலகம் வர முடியாது என்பதை ஒரே வரியில் கூறியதை தான் அவர் இப்படி தெரிவித்துள்ளார்.

ஸ்வப்னில் ஸ்ரீவத்சாவின் இந்த பதிவு தற்போது இணையதளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது. பலரும் அந்த ஊழியரையும், ஸ்வப்னில் ஸ்ரீவத்சாவையும் பாராட்டி வருகின்றனர். ஒருவர், ‛‛உண்மையிலேயே அந்த ஊழியர் நேரடியாக பேசுகிறார். டிராமா இல்லை. சாக்குப்போக்கு இல்லை. நேர்மை மட்டுமே உள்ளது'' என பாராட்டினர். அதேவேளையில் இன்னும் சிலர் அந்த ஊழியர் விடுப்பு கேட்ட டோனை விமர்சனம் செய்கின்றனர். இதுபற்றி, ‛‛பாஸ் டோனில் விடுப்பு கேட்கிறார். அதிகார தொனி இருக்கிறது. உண்மையில் Gen Z கோரிக்கை வைப்பது இல்லை. உத்தரவு தொனியை செயல்படுத்துகின்றனர்'' என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+