மிக் 21 போர் விமானத்தை பாக். சுட்டு வீழ்த்தியது, விமானி பிடிபட்டுள்ளார்.. இந்தியா அறிவிப்பு

இன்று காலை சென்ற மிக் 21 விமானத்தை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது. விமானி அபிநந்தனை மீட்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் அது கூறியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    விமானி சிக்கியது உண்மையா?.. பதில் கூறிய வெளியுறவு அமைச்சகம்- வீடியோ

    டெல்லி: இந்தியாவின் மிக் 21 ரக போர் விமானத்தை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியுள்ளதாக இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது. அதை செலுத்திய விமானி அபிநந்தனைக் காணவில்லை. அவர் பாகிஸ்தான் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் அவரை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறியுள்ளார்.

    இன்று காலை பாகிஸ்தானின் எப்-16 போர் விமானம் ஒன்று இந்திய எல்லைக்குள் புகுந்த பின் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதேபோல் 2 எப்-16 விமானங்கள் விரட்டியடிக்கப்பட்டன. இந்த நிலையில் விமானி அபிநந்தன் செலுத்திய மிக் 21 ரக போர் விமானம் மட்டும் திரும்பி வரவில்லை. அது என்ன ஆனது என்று தெரியாமல் இருந்தது.

    IAF pilot Abhinandan took off in a MiG 21 jet today, not returned yet

    அதை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக செய்திகள் வெளியாகின. அபிநந்தன் பிடிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இருப்பினும் அதை மத்திய அரசு உறுதிப்படுத்தவில்லை. இந்த நிலையில் தற்போது இந்த செய்தியை மத்ச்திய வெளியுறவுத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறுகையில் மிக் 21 ரக போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. அதன் விமானி பாகிஸ்தானில் சிறை பிடிக்கப்பட்டுள்ளார். அவரை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    IAF pilot Abhinandan took off in a MiG 21 jet today, not returned yet

    இந்திய வான் எல்லைக்குள் நுழைந்த 2 பாக் விமானங்கள் குண்டு வீசிவிட்டு பறந்தன. அந்த விமானங்களை இந்திய விமானங்கள் வழி மறித்து தாக்கின . பாகிஸ்தானின் எப் 16 போர் விமானத்தை இந்தியா சுட்டு வீழ்த்தியது. பாக் விமானம் அந்த நாட்டின் பகுதியில் விழுந்தது. இந்த மோதலின்போதுதான் இந்திய விமானப்படையின் மிக் 21 போர் விமானமும் சுடப்பட்டது என்றார்.

    மிக் 21 வீழ்த்தப்பட்டதை விட விமானி பாகிஸ்தானிடம் பிடிபட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+