பாகிஸ்தானில் புகுந்து இந்திய ராணுவம் அட்டாக்… 1971ம் ஆண்டை நினைவுபடுத்துகிறதா?
Recommended Video

டெல்லி:1971ம் ஆண்டுக்கு பிறகு, 47 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தானுக்குள் இந்தியா அதிரடியாக புகுந்து தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்துள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இயங்கி வந்த தீவிரவாதிகள் முகாமை இந்திய விமானப்படை குண்டுவீசி தகர்த்துள்ளது. இதன்மூலம் புல்வாமா தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
புல்வாமா பகுதியில் கடந்த பிப்ரவரி 14ம் தேதி ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். நாடு முழுவதும் இந்த தாக்குதல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மறுத்த பாகிஸ்தான்
உலக நாடுகளும் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. கொடூர தாக்குதலை நடத்திய ஜெய்ஷ் இ முகமது இயக்கத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு அளிப்பதாக கூறப்பட்டது. ஆனால் இந்த குற்றச்சாட்டை பாகிஸ்தான் இன்று வரையிலும் மறுத்து வருகிறது.

பாலகோட் பகுதி
இந்நிலையில் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை இன்று அதிகாலை பாகிஸ்தானில் உள்ள பாலகோட் பகுதிக்குள் புகுந்து... அங்கு இயங்கி வந்த தீவிரவாதிகள் முகாம்களை குண்டுவீசி தகர்த்தது.

மிராஜ்
இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 என்ற 12 போர் விமானங்கள் மூலம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆயிரம் கிலோ அளவிலான வெடிகுண்டுகளை கொண்டு தீவிரவாத முகாம்கள் ஒட்டு மொத்தமாக அழிக்கப்பட்டன.

மீண்டும் 1971
கிட்டத்தட்ட 1971ம் ஆண்டுக்கு பின்னர் 47 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தானில் நேரடியாக புகுந்து இந்தியா தாக்குதல் நடத்தியிருப்பதாக தெரிகிறது. 1971ம் ஆண்டில் வங்கதேச விடுதலை போரின் போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

வான்வழி தாக்குதல்
அதாவது அந்த ஆண்டில் டிசம்பர் மாதம் 3ம் தேதி இந்த தாக்குதல் நடைபெற்றது. இந்திய வான்வழி எல்லையில் பாகிஸ்தான் புகுந்து தாக்குதல் நடத்தியதை யாரும் மறந்திருக்க முடியாது. கிட்டத்தட்ட அது போன்ற ஒரு தாக்குதலை இந்திய ராணுவம் தற்போது கையாண்டு இருப்பதாக தெரிகிறது.

தொடரும் தாக்குதல்கள்
பொதுவாக பாகிஸ்தானில் ராணுவ சர்வாதிகாரமும் மக்களாட்சியும், மாறி மாறி வந்தாலும் நிர்வாகத்தில் ராணுவத்தின் கை மேலோங்கியேதான் இருக்கிறது. இந்தியாவுக்கு எதிரான தாக்குதல்களில் அது முனைப்பு காட்டுகிறது என்பதையும் முழுதாக மறுப்பதற்கில்லை இது போன்ற தாக்குதல் சம்பவங்களை நினைவு கூரலாம்.












Click it and Unblock the Notifications