இனிமேல் ஒழுங்கா நடந்து கொள்கிறோம்.. மத்திய அரசுக்கு உறுதியளித்த நெட்பிளிக்ஸ்.. ic 814 hijack காரணம்
டெல்லி: மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை, நெட்பிக்ஸ் இந்தியாவின் உள்ளடக்கத் தலைவர் மோனிகாவிடம் "ஐசி 814" விமான கடத்தல் சம்பவம் தொடர்பான வெப் தொடர் குறித்து விளக்கம் கேட்டதையடுத்து, நெட்பிக்ஸ் நிறுவனம், எதிர்காலத்தில் தங்கள் தளத்தில் வெளியாகும் தொடர்கள் அனைத்தும் இந்தியாவின் உணர்வுகளை மதித்து உருவாக்கப்படும் என உறுதி அளித்துள்ளது.
புகழ்பெற்ற ஓடிடி தளமான நெட்பிக்ஸ் தயாரித்துள்ள ic 814 the kandahar hijack என்ற வெப் தொடர், 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசி 814 விமான கடத்தல் சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் இடம்பெற்றுள்ள சில கதாபாத்திரங்களுக்கு இந்து மத பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

1999-ம் ஆண்டு நேபாளத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டது IC 814 இந்திய ஏர்லைன்ஸ் விமானம். இந்த விமானம் நடுவானில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஹர்கத் உல் முஜாஹிதீன் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டது. முதலில் பஞ்சாப் அமிர்தசரஸ் நகரில் விமானத்தை தரையிறக்க பயங்கரவாதிகள் முயற்சித்தனர். ஆனால் கடைசிநேரத்தில் திடீரென லாகூருக்கு விமானத்தை திசைதிருப்பியது பயங்கரவாதிகள் கும்பல். அங்கு விமானத்துக்கு எரிபொருள் நிரப்பிய நிலையில் தலிபான்கள் பிடியில் சிக்கிய ஆப்கானிஸ்தானின் கந்தஹார் நகருக்கு பயணிகளுடன் விமானத்தை கடத்திச் சென்றது அந்த கும்பல்.
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட இந்த விமான கடத்தல் சம்பவத்தில் இந்து மத பெயர்களைப் பயன்படுத்துவது ஏன்? என்ற கேள்வி பலராலும் எழுப்பப்பட்டு வருகிறது. இந்த சர்ச்சையை தொடர்ந்து, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை, நெட்பிளிக்ஸ் இந்தியாவின் உள்ளடக்கத் தலைவர் மோனிகாவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

சம்பவத்தின் சுருக்கம்:
- 1999: இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து காந்தகார் நகருக்கு கடத்தப்பட்டது.
- பயங்கரவாதிகள்: பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் விமானத்தை கடத்தி, விமான பயணிகளை பிணையாளாக வைத்துக்கொண்டு, சிறையிலிருந்த தீவிரவாதிகளை விடுவிக்க கோரிக்கை விடுத்தனர்.
- விடுதலை: அகமது ஓமர் சையது ஷேக், மசூத் ஆசார், முஸ்தாக் அகமது ஜார்கர் ஆகிய மூன்று பயங்கரவாதிகள் விடுவிக்கப்பட்ட பிறகு, விமான பயணிகள் விடுவிக்கப்பட்டனர்.
ஏன் இந்த சர்ச்சை?
- கதாபாத்திர பெயர்கள்: தொடரில் இடம்பெற்றுள்ள சில கதாபாத்திரங்களுக்கு இந்து மத பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது.
- பயங்கரவாதிகள்: இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications