கடன் மோசடி.. ஐசிஐசிஐ வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி சந்தா கோச்சரின் கணவர் தீபக் கோச்சர் கைது
டெல்லி: ஐசிஐசிஐ வங்கி -வீடியோகான் கடன் மோசடி வழக்கில் ஐசிசிஐ வங்கியின் முன்னாள் இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான சாந்தா கோச்சரின் கணவர் தீபக் கோச்சரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஐசிஐசிஐ வங்கியில் இருந்து வீடியோகான் நிறுவனத்துக்கு 3250 கோடி ரூபாய் கடனை முறைகேடாக சாந்தா கோச்சரின் கணவர் தீபக் கோச்சர் பெற்றுத்தந்தார் என்று புகார் உள்ளது. இந்த கடன் கடந்த 2012ம் ஆண்டு வழங்கப்பட்டுள்ளது. வீடியோகானின் வேணுகோபால் தூத் தீபக் கோச்சருடன் சேர்ந்து ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்து பின்னர் பணத்தை வேண்டிய கணக்கிற்கு மாடிறறியதாக புகார் எழுந்தது.

இது தொடர்பான புகாரையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் தீபக் கோச்சரை கைது செய்துள்ளனர். ஊழல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டு தொடர்பாக தீபக் கோச்சரை மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) மற்றும் அமலாக்கத்துறை விசாரித்து வருகின்றன. சாந்தா கோச்சர் மற்றும் தீபக் கோச்சர் ஆகிய இருவரையும் பல முறை அமலாக்கத்துறை தீவிரமாக விசாரித்த நிலையில் இப்போது தீபக் கோச்சர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐசிசிஐ வங்கி நிர்வாகம் ஆரம்பத்தில் சாந்தா கோச்சரை ஆதரித்தது. இருப்பினும், அவர் அக்டோபர் 4, 2018 அன்று பதவி விலகினார். கடந்த ஆண்டு ஜனவரியில் வங்கியின் வாரியம் அவரை பதவி நீக்கம் செய்தது, அவர் பதவி விலகுவதை தடுத்தது.
இதனிடையே கடன்கள் தகுதி அடிப்படையில் வழங்கப்பட்டதாகவும், தனது கணவரின் வணிகத்துடன் கடன்கள் வழங்கப்பட்டதில் எந்த தொடர்பும் இல்லை என்று சாந்தா கோச்சர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமலாக்கத்துறையிடம் கூறியிருந்தார்.
இந்நிலையில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக சாந்தா கோச்சர் இருந்த காலத்தில் ரூ .7,862 கோடி ரூபாயை மொத்தம் 24 பெரிய கடன்களாக வழங்கி கடன் மோசடி செய்யப்பட்டிருக்கலாம் என புகார் எழுந்துள்ளது. அமலாக்கத்துறை இதுபற்றி விசாரித்து வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications