Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவாக்சினால் பக்க விளைவுகள்? வெளியான ஆய்வு முடிவு.. உடனே மறுப்பு கொடுத்த ஐசிஎம்ஆர்.. என்னாச்சு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கோவாக்சின் தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படலாம் என ஆய்வு முடிவு வெளியான நிலையில், இது தொடர்பாக ஐசிஎம்ஆர் அமைப்பு பரபர அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த போது பலருக்கு மோசமான பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரிக்கும் சூழலும் ஏற்பட்டது. அந்தக் காலகட்டத்தில் கொரோனா வேக்சின்கள் தான் உயிரிழப்புகளைக் கணிசமாகக் குறைத்தன.

ICMR distanced itself from Banaras Hindu University Covaxin side effect research


ஆனால் சமீப காலமாக வேக்சின் குறித்து எதிர்மறை கருத்துகள் வெளியாகி வருகிறது. முதலில் கோவிஷீல்டு போட்டவர்களுக்குப் பக்க விளைவுகள் ஏற்படுவதை அந்த நிறுவனமே ஒப்புக்கொண்டது.

பக்க விளைவுகள்: இதற்கிடையே ஹைரதாபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் எடுத்துக் கொண்டவர்களுக்குப் பக்க விளைவுகள் ஏற்படுவதாகச் சமீபத்தில் ஆய்வு முடிவு ஒன்று வெளியானது.. அதில் கோவாக்சின் போட்டவர்களில் சுமார் 3இல் ஒருவருக்குப் பக்க விளைவுகள் ஏற்படுவதாகக் கூறப்பட்டு இருந்தது.. பனாரஸ் இந்து பல்கலைக்கழக ஆய்வாளர்கள் 926 பேரிடம் நடத்திய ஆய்வில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக ஒரு சதவிகித பேருக்குப் பக்கவாதம் மற்றும் நரம்பு மண்டலத்தைத் தாக்கும் நோய்களும் கூட வரலாம் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த 2022 ஜனவரி முதல் 2023 ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் இந்த ஆய்வை நடத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது. அதில் 50% பேருக்குச் சுவாச நோய்த்தொற்றுகள் ஏற்படுவதாகவும் 30% பேருக்குத் தோல் மற்றும் நரம்பு மண்டலக் கோளாறுகள் முதல் எலும்பு மற்றும் தசைப் பிரச்சனைகள் வரை பல பாதிப்புகள் ஏற்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. சில பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகளும் ஏற்படுவதாகக் கூறப்பட்டு இருந்தது.

ஐசிஎம்ஆர்: இதற்கிடையே பனாரஸ் இந்து பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் பிழைகள் இருப்பதாக இந்திய மருத்துவ ஆய்வு கவன்சிலான ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. மோசமான வழிமுறைகளைப் பின்பற்றி இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாகவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஐசிஎம்ஆர் தலைவர் ராஜீவ் பாஹ்ல் கூறுகையில், "இந்த ஆய்வில் பிழைகள் இருக்கிறது. எப்போதும் ஒரு ஆய்வு என்றால் வேக்சின் போட்டவர்களை வேக்சின் போடாதவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.. ஆனால், வேக்சின் போடாதவர்களை இந்த ஆய்வில் கணக்கில் எடுத்துக் கொள்ளவே இல்லை. எனவே, இந்த பக்க விளைவுகள் கோவாக்சின் தடுப்பூசியால் தான் ஏற்பட்டது என்பதைச் சொல்ல முடியாது.

பிழைகள் இருக்கு:
மேலும் பொதுவாகவே மக்களிடையே இந்த பாதிப்புகள் எந்தளவுக்கு ஏற்படுகிறது என்பதையும் அவர்கள் குறிப்பிடவில்லை. அதாவது வேக்சின் இல்லாமல் இந்த பாதிப்பு எத்தனை சதவிகிதம் ஏற்படுகிறது என்ற தரவுகள் இல்லாததால்.. கொரோனா தடுப்பூசிக்குப் பிறகு இந்த பாதிப்புகளில் அதிகரித்துள்ளதா என்பதைத் துல்லியமாகச் சொல்ல முடியவில்லை" என்றார்

கோவிஷீல்டு மட்டுமில்லை.. கோவாக்சின் கூட அரிய பக்க விளைவுகளை ஏற்படுத்தும்! பரபர ஆய்வு முடிவுகள்


மேலும், இந்த டேட்டாவை அவர்கள் சேகரித்த முறையிலும் பிரச்சினை இருக்கிறது. தடுப்பூசி போடப்பட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு, ஆய்வில் பங்கேற்பாளர்களைத் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்டு தரவுகளைச் சேகரித்துள்ளனர். மருத்துவ பரிசோதனை அல்லது மருத்துவ ரிப்போர்ட்டை அவர்கள் சரிபார்க்கவில்லை என்பதால் இவை துல்லியமாக இருக்கும் எனச் சொல்ல முடியாது என்கிறார்கள் ஆய்வாளர்கள்

தொடர்பு இல்லை:
மேலும் கோவாக்சின் பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது என்று கூறும் இந்த ஆய்வுக்கும் ஐசிஎம்ஆர் அமைப்புக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்றும் இந்த ஆய்வுக்குத் தொழில்நுட்ப உதவி அல்லது நிதி உதவி என எதையும் செய்யவில்லை என்பதையும் தெளிவுபடுத்தி உள்ளனர்.

முன்னதாக கோவாக்சினை உருவாக்கிய பாரத் பயோடெக் நிறுவனமும் இந்த ஆய்வு முடிவுகள் குறித்து கேள்வி எழுப்பி இருந்தது. மேலும், பல்வேறு ஆய்வுகளும் கோவாக்சின் பாதுகாப்பானது என்றே கூறியுள்ளதாகவும் தெரிவித்தது. இந்தச் சூழலில் தான் ஐசிஎம்ஆர் அமைப்பும் இந்த ஆய்வுக்கும் தங்களுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை எனக் கூறியிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+