ஹேப்பி நியூஸ்-இரட்டை மரபணு மாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்களை அழிக்கக் கூடியது கோவாக்சின்- ஐ.சி.எம்.ஆர்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாட்டில் அதிவேகமாக பரவி வரும் இரட்டை மரபணு மாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்களை கோவாக்சின் தடுப்பூசிகள் அழிக்கக் கூடிய திறன் பெற்றவை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) ஆய்வில் நிரூபணமாகி உள்ளது.

நாட்டில் கொரோனா 2-வது அலை படுவேகமாக பரவி வருகிறது. அதேநேரத்தில் கொர்ரோனா தடுப்பூசிகள் போடும் பணியும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் தடுப்பூசிகள்

இந்தியாவில் தடுப்பூசிகள்

தற்ப்போதைய நிலையில் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. ரஷ்யாவின் ஸ்புட்னிக் V தடுப்பூசியை போடுவதற்கும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் இதுவரை மொத்தம் 13 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

தடுப்பூசிகள் எண்ணிக்கை

தடுப்பூசிகள் எண்ணிக்கை

நாடு முழுவதும் கடந்த 95 நாட்களாக தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இன்று காலை 7 மணி வரை 19,01,413 முகாம்களில்‌ 13,01,19,310 பயனாளிகளுக்கு, தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 29 லட்சம் டோஸ்கள் போடப்பட்டுள்ளன. 95-வது நாளான நேற்று 29,90,197 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இலவசமாக கிடைக்குமா?

இலவசமாக கிடைக்குமா?

மேலும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக கிடைக்கும் என முன்னர் மத்திய அரசு அறிவித்தது. ஆனால் கொரோனா தடுப்பூசிகளுக்கு விலை நிர்ணயிப்பது உள்ளிட்டவைகளால் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசிகள் கிடைக்குமா? என்பதும் கேள்விக்குறியாகி வருகிறது.

கோவாக்சின் திறன்

கோவாக்சின் திறன்

இதனிடையே இரட்டை மரபணு மாற்றம் அடைந்த அல்லது உருமாறி கொரோனா வைரஸ்கள் தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு நடத்தியது. பிரிட்டன், பிரேசில், தென்னாப்பிரிக்காவை உறைய வைத்த உருமாறிய கொரோனா வைரஸ்கள் அல்லது இரட்டை மரபணு மாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்களை கோவாக்சின் தடுப்பூசி அழிக்கும் வல்லமை கொண்டது என்பதும் இந்த ஆய்வில் நிரூபணமாகி உள்ளது.

ஐ.சி.எம்.ஆர். ஆய்வில் மீண்டும் நிரூபணம்

ஐ.சி.எம்.ஆர். ஆய்வில் மீண்டும் நிரூபணம்

கோவாக்சின் தடுப்பூசியானது இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. கோவாக்சினின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாக ஏற்கனவே நடத்தப்பட்ட ஆய்வுகளிலும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது ஐ.சி.எம்.ஆர். நடத்திய புதிய ஆய்விலும் கோவாக்சின் தடுப்பூசியின் திறன் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கக் கூடிய செய்தியாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+