Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட சக்தி வாய்ந்த நபர்கள் லிஸ்ட்! முதலிடம் மோடி, மூன்றாம் இடம் மோகன் பகவத்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள சக்தி வாய்ந்த நபர்கள் பட்டியலில் பிரதமர் மோடி இடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் 2 வது இடத்தில் அமித்ஷாவும் 3 வது இடத்தில் மோகன் பகவத்தும் உள்ளனர்.

லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், பல்வேறு கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன. தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது மட்டுமின்றி.... செல்வாக்கு மிக்க நபர்கள்.. பிரபலமான தலைவர்கள் என பல்வேறு வகையான கருத்துக்கணிப்புகளையும் தனியார் செய்தி நிறுவனங்கள், அமைப்புகள் வெளியிட்டு வருகின்றன.

 IE 100 most powerful citizens list PM Modi Top in the list Mogan bagawat gets 3rd place

அந்த வகையில் பிரபல ஆங்கில ஊடகமான இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்தியாவின் சக்தி வாய்ந்த 100 சிட்டிசன்கள் என்ற லிஸ்டை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் அரசியல் தலைவர்கள் மட்டும் இன்றி விளையாட்டுத்துறை, சினிமா துறையை சேர்ந்த பிரபலங்களும் இடம்பிடித்துள்ளனர். பட்டியலில் முதல் 5 இடத்தில் மத்தியில் ஆளும் பாஜகவே ஆதிக்கம் செலுத்துகிறது.

முதல் இடத்தில் பிரதமர் மோடி: எதிர்பார்த்தது போலவே இந்த பட்டியலில் முதலிடத்தில் பிரதமர் மோடி உள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டாம் இடம் வகிக்கிறார். மூன்றாவது இடத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளார். 4-வது இடத்தில் தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் உள்ளார். 5-வது இடத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளார். இந்த பட்டியலில் ஆச்சர்யப்படும் படியான சில விஷயங்களும் உள்ளன.

அதாவது, முதல் 10 இடத்தில் தொழில் அதிபர் முகேஷ் அம்பானி பெயர் இல்லை. ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக உள்ள முகேஷ் அம்பானி.. உலக அளவில் விரல் விட்டு எண்ணக்கூடிய பெரும் பணக்காரர்களில் ஒருவராகவும் உள்ளார். ஆனால், முதல் 10 இடங்களில் முகேஷ் அம்பானி பெயர் இல்லாதது சற்று வியப்பை கொடுக்கிறது. முகேஷ் அம்பனி இந்த பட்டியலில் 11-வது இடத்தில் உள்ளார்.

6ம் இடத்தில் ராஜ்நாத் சிங்: இந்த பட்டியலில் விளையாட்டு துறையை சேர்ந்த ஒரே ஒரு பெண் வீராங்கனை மட்டுமே இடம் பெற்றுள்ளார். மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சஞ்செய் சிங்கிற்கு எதிரான போராட்டத்தில் வீதியில் இறங்கி போரடிய வினேஷ் போகத் பெயர் மட்டுமே 100 பேர் கொண்ட பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே ஒரு பெண் விளையாட்டு வீராங்கனை ஆவார்.

யோகி ஆதித்யநாத்: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்தப் பட்டியலில் ஆறாம் இடத்தில் உள்ளார். ராஜ்நாத்சிங் 7-வது இடத்திலும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 8-வது இடத்திலும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா 9-வது இடத்திலும் உள்ளனர். தொழில் அதிபர் கவுதம் அதானி 10 -வது இடத்தில் உள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 15-வது இடத்தில் உள்ளார்.

ராகுல் காந்தி, கெஜ்ரிவால்: காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக ராகுல் காந்தி 16-வது இடத்தில் உள்ளார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 18-வது இடத்திலும், கர்நாடக முதல்வர் சித்தராமையா 22 வது இடத்திலும் உள்ளனர். பீகார் முதல்வரும் இந்தியா கூட்டணியை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவரும் தற்போது கூட்டணியை விட்டு வெளியேறி பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ளவருமனா நிதிஷ் குமார் 24-வது இடத்தில் உள்ளார்.

முதல்வர் ஸ்டாலின், கேப்டன் டோனி: தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் லிஸ்டில் 25 வது இடத்தில் உள்ளார். நடிகர் ஷாருக்கான் 27-வது இடத்தில் இந்த பட்டியலில் உள்ளார். சோனியா காந்தி 29-வது இடமும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே 36 வது இடத்திலும் உள்ளனர். இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி 38-வது இடத்தில் உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி 58-வது இடத்தில் உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+