அம்மாடியோவ்.. ஒரு கொரோனா நோயாளி.. இத்தனை பேருக்கு நோயை பரப்புகிறாராம்.. சமூக இடைவெளி முக்கியம்!
டெல்லி: ஒரு கொரோனா தொற்றுள்ள நபர் சமூக இடைவெளி வழிமுறைகளை பின்பற்றாவிட்டால் அவரால் 30 நாட்களில் சுமார் 406 பேர் வரை பாதிக்கப்படலாம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா தொற்று தொடர்ந்து அதிவேகமாக அதிகரித்து வருகிறது. தினமும் 3,00,000-க்கும் மேற்பட்ட தினசரி பாதிப்புகள், 2,500-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

உயிரை பறிக்கும் கொரோனா
அனைத்து மாநிலத்திலும் நிலைமை கட்டுக்கடங்காமல் சென்று வருகிறது. நாடு முழுவதும் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் இல்லை. மருத்துவமனைகளில் இருக்கும் நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் இல்லை. ஆக்சிஜன் தட்டுப்பாடு மகாராஷ்டிரா, டெல்லியில் தினமும் ஏராளமானோர் உயிரை பறித்து வருகிறது.

தடுப்பு வழிமுறைகள் முக்கியம்
இதற்கிடையே இந்தியாவில் மே மாத மத்தியில் கொரோனா வைரஸ் உச்சத்தை தொடும் என இந்திய விஞ்ஞானிகள் உறைய வைத்துள்ளனர். என்னதான் மருத்துவ கட்டமைப்புகள் மூலம் கொரோனவை விரட்டியக்க முயன்றாலும் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் மூலம்தான் கொரோனாவை முழுமையாக விரட்டியடிக்க முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

ஒரு நபரால் 406 பேர் பாதிப்பு
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வாலும் இந்த கருத்தையே தான் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: -ஒரு நபர் நோய்த்தொற்றுக்கு ஆளானால், அவர்களுடன் தொடர்பு கொண்டவர்கள் கூட தொற்றுநோயால் பாதிக்கப்படுவார்கள். ஒரு கொரோனா தொற்றுள்ள நபர் சமூக இடைவெளி வழிமுறைகளை பின்பற்றாவிட்டால் அவரால் 30 நாட்களில் சுமார் 406 பேர் வரை பாதிக்கப்படலாம்.

இது ஒரு சமூக தடுப்பூசி
இதனை பல்வேறு பல்கலைக்கழக ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன. தொற்று பாதித்த நபர் 50% சமூக இடைவெளியை பின்பற்றினால் அவரால் 406 நபர்களுக்கு பதிலாக 15 பேர் மட்டுமே பாதிக்கப்படுகின்றனர். அதே வேளையில் தொற்று பாதித்த நபர் 75% சமூக இடைவெளியை பின்பற்றினால் அவர் மூலம் கொரோனவால் பாதிக்கப்படுபவர்கள் வெறும் 2 பேர் மட்டுமே. கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்றினால் மில்லியன் கணக்கானவர்களுக்கு நோய் பரவாமல் தடுக்க முடியும். சமூக இடைவெளி என்பது ஒரு சமூக தடுப்பூசி மாதிரி. எனவே அனைவரும் சமூக இடைவெளியை மறக்காமல் பின்பற்ற வேண்டும் என்று லாவ் அகர்வால் தெரிவித்தார்.
-
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications