ஆதார் கார்டு .. இதை செய்யாட்டி உங்க அக்கவுண்டே கேன்சல் ஆகிடும்.. உடனே செய்யுங்க
டெல்லி: அஞ்சல்துறையில் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், பொது வருங்கால வைப்பு நிதி உட்பட சிறு சேமிப்புத் திட்டங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் வரும் செப்டம்பர் 30க்குள் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் உங்கள் சேமிப்பு கணக்கு முடக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
எல்லா அரசு துறைகளுமே ஆதார் கார்டை கட்டாயம் ஆக்கி உள்ளன. பிறப்பது தொடங்கி, பள்ளியில் சேர்ப்பது, கல்வி உதவி தொகை பெறுவது, ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க, ரேஷன் கார்டில் பெயரை நீக்க, கல்லூரிகளில் சேர, கல்லூரிகளில் படித்து முடித்து வேலைக்கு சேரவும், வங்கிகளில் கணக்கு துவங்கவும், திருமணத்தை பதியவும், சொத்துக்களை பதியவும், சொத்துக்களை விற்பனை செய்யவும், வருமான வரி கட்டவும் ஆதார் கார்டு கட்டாயம் ஆகி உள்ளது.

இதுதவிர முதியோர் உதவி தொகை, மகளிர் உரிமை தொகை, ஊனமுற்றோர் உதவி தொகை, அரசு தரும் உரமானியம், விவசாயிகளுக்கான உதவி தொகை திட்டங்கள், இன்சூரன்ஸ், சேமிப்பு கணக்கு என எல்லாவற்றுக்குமே ஆதார் கார்டு வேண்டும். ஏன் ஒருவர் இறந்துவிட்டார் என்றால், அவருக்கு இறப்பு சான்றிதழ் வாங்கவும் ஆதார் கார்டு வேண்டும். ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே செய்ய முடியாது.
ஆதார் கார்டு இல்லாமல் மத்திய அரசு அல்லது மாநில அரசின் எந்த திட்டங்களையும் நன்மையையும் பெற முடியாது. இந்தசூழலில் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், பொது வருங்கால வைப்பு நிதி உட்பட சிறு சேமிப்புத் திட்டங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் தங்கள் ஆதார் எண்ணை சம்பந்தப்பட்ட வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்தில் கண்டிப்பாக சமர்பிக்க வேண்டும். தவறும்பட்சத்தில், அவர்களது சேமிப்புக் கணக்குகள் முடக்கப்பட்டு விடும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஆதார் எண்ணை தங்கள் சேமிப்பு கணக்குகளுடன் கட்டாயம் இணைத்திருக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகம் கடந்த மார்ச் மாதம் அறிவித்த நிலையில், அதற்கு 6 மாதம் காலஅவகாசம் வழங்கி இருந்தது.
அதன்படி, ஏப்ரல் 1 ஆரம்பித்த அவகாசம் செப்டம்பர் 30-ம் தேதி முடிகிறது. எனவே தங்கள் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். தவறும்பட்சத்தில், அவர்களது கணக்குகள் முடக்கப்பட்டு விடும் அபாயம் உள்ளது. மீண்டும் மத்திய அரசு அவகாசம் வழங்குமா என்பது உறுதியாக தெரியவில்லை. எனவே அவகாசம் முடிவதற்குள் ஆதார் எண்ணை இணைத்துவிடுங்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications