டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லோக்சபா தேர்தலில் மட்டும் நாம் தோற்றுவிட்டால்... அவ்வளவுதான்.. அமித்ஷா எச்சரிக்கை

Google Oneindia Tamil News

Recommended Video

    தேர்தலில் மட்டும் நாம் தோற்றுவிட்டால்?.. அமித்ஷா எச்சரிக்கை- வீடியோ

    டெல்லி: வரும் மே மாதம் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மட்டும் தோற்றுவிட்டால்... இந்தியா 200 ஆண்டுகள் அடிமையாக இருந்ததை போல் ஆகிவிடும் என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    பாஜகவின் தேசிய மாநாடு டெல்லி ராம்லீலா மைதானத்தில் இரு நாட்கள் நடைபெறுகிறது. மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    அடிமை

    அடிமை

    அப்போது அமித்ஷா பேசுகையில் மக்களவைத் தேர்தல் 3-ஆவது பானிபட் போருக்கு சமம். இந்த தேர்தலில் பாஜக தோற்றுவிட்டால் நாடு 200 ஆண்டுகள் ஆங்கிலேயர்களிடம் அடிமையானதை போன்ற நிலை ஏற்படும்.

    நாட்டுக்கு முக்கியம்

    நாட்டுக்கு முக்கியம்

    1761-இல் மராத்தியர்கள், முகலாய படையிடம் தோற்றதால் இந்திய நாடே 200 ஆண்டுகள் ஆங்கிலேயரிடம் அடிமையாக இருக்க வேண்டியதாயிற்று. எனவே வரும் மக்களவைத் தேர்தல் நாட்டுக்கு மிகவும் முக்கியம்.

    வீழ்த்த முடியாது

    வீழ்த்த முடியாது

    மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும். பிரதமர் நரேந்திர மோடியை வீழ்த்த முடியாது. அவர் ஒரு போர் வீரர், எத்தனை கட்சிகள் ஒன்றிணைந்தாலும் அவரை வீழ்த்த முடியாது.

    தொண்டர்கள்

    தொண்டர்கள்

    2014-ஆம் ஆண்டு தேர்தலின் போது வென்ற இடங்களை விட கூடுதல் இடங்களை பாஜக வெல்லும். அயோத்தியில் ராமர் கோயில் விரைவில் கட்டப்படும் என்ற வாக்குறுதி ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்களின் பாராட்டை பெற்றுள்ளது. என்றார்.

    English summary
    BJP president Amit Shah on Friday said that the upcoming Lok Sabha elections were like the third battle of Panipat between Marathas and the Afghan army fought in the 1761.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X