மோடி மாதிரி பொய்சொல்லல.. நாங்க ஆட்சிக்கு வந்தால் ரூ.3லட்சத்து 60 ஆயிரம் தருவோம் - ராகுல் உறுதி
டெல்லி: நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரூ.3லட்சத்து 60 ஆயிரம் மக்களின் வங்கி கணக்கில் செலுத்துவோம் என காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
மக்களவை தேர்தல் நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி இதுவரை 5 கட்டங்களாக நடந்து முடிந்துவிட்டது. இன்னும் 2 கட்ட தேர்தல் வரும் மே 12 மற்றும் மே 19 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளது. வரும் மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் எப்படியாவது அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது. இதற்காக தேர்தல் வாக்குறுதியாக ஒவ்வொரு ஏழை குடும்பத்திற்கும் மாதம் ரூ.6 ஆயிரம் என ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இந்நிலையில் அரியானாவின் சிர்ஸாவில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நாட்டு மக்களுக்கு ஒரு உண்மையை சொல்ல விரும்புகிறேன். பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15லட்சம் போடுவேன் என்று பொய் சொன்னார்.
ஆனால் நான் இப்போது உங்களுக்கு ஒரு உறுதியை அளிக்கிறேன். என்னவென்றால், நாங்கள் (காங்கிரஸ்) ஆட்சிக்கு வந்தால், ஐந்து வருடங்களில் அனைத்து ஏழை மக்களின் வங்கி கணக்கிலும் ரூ.3லட்சத்து 60 ஆயிரம் செலுத்துவோம் என்று உறுதி அளிக்கிறேன்" என்றார்.












Click it and Unblock the Notifications