இது நடந்தால் 2024 நாடாளுமன்ற தேர்தலில் கட்டாயம் போட்டி.. அரசியலில் நுழைய தயாரான நடிகை கங்கனா ரனாவத்
டெல்லி: 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவீர்களா? என்று பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு நடிகை கங்கனா ரனாவத் கூறிய பரபரப்பான பதில் என்பது அவர் அரசியலில் நுழைய தயாரானதை சூசகமாக உணர்த்தும் வகையில் உள்ளது.
நடிகை கங்கனா ரனாவத் ‛தேஜஸ்' எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை இயக்குனர் சர்பேஷ் மேவாரா இயக்கி உள்ளார்.

இந்திய விமானப்படை விமானியான தேஜஸ் கில்லை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. விமானப்படையின் செயல்பாட்டை காட்டும் வகையில் கங்கனா ரனாவத் விமானியாக நடித்துள்ளார்.
இந்த திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தான் இன்று காலை கிருஷ்ணரின் புகழ்பெற்ற துவாரகா கோவிலில் பிரார்த்தனை செய்தார். அப்போது துவாரகா கோவிலுக்கு வந்தது மற்றும் அயோத்தி ராமர் கோவில் குறித்து அவரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
தற்போதைய சாமி தரிசனம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, கங்கனா ரனாவத் ‛‛
துவாரகா என்பது ஒரு ஆன்மீக நகரம். இங்கு வரும் நான் பாக்கியசாலியாக கருதுகிறேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் நான் இங்கு வந்து செல்கிறேன். தண்ணீரில் மூழ்கி இருக்கும் துவாரகா நகரையும் மேலே இருந்து பார்க்க முடியும். நீருக்கடியில் சென்று எச்சங்களை பார்க்கும் வசதியை அரசு ஏற்படுத்த வேண்டும் என விரும்புகிறேன். எனக்கு கிருஷ்ணரின் நகரம் சொர்க்கம் போன்றது'' என்றார்.
அதன்பிறகு 2024 ஜனவரியில் திறக்கப்படும் அயோத்தி ராமர் கோவில் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கங்கனா ரனாவத் கூறியதாவது: பாஜகவின் முயற்சியால் 600 ஆண்டு கால போராட்டத்துக்கு பிறகு நாம் அயோத்தியில் ராமர் கோவிலை காண உள்ளோம். சனாதன தர்மத்தின் கொடி உலகம் முழுவதும் பறக்க வேண்டும்'' என்றார்.
இதையடுத்து பத்திரிகையாளர்கள், ‛‛அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் போட்டியிடுவீர்களா?'' என கேள்வி கேட்டனர். அதற்கு கங்கனா ரனாவத், ‛‛கிருஷ்ணர் ஆசீர்வதித்தால் நான் போட்டியிடுவேன்'' என தெரிவித்துள்ளார். தற்போது மத்திய பாஜக அரசின் செயல்பாடுகளை தொடர்ந்து கங்கனா ரனாவத் பாராட்டி வருகிறார். இதனால் விரைவில் அவர் பாஜகவில் சேர்ந்து அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடலாம் என தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு அவர் இப்படி பதிலளித்துள்ளார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications