டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மீண்டும் பிரதமராகும் மோடி செல்லும் முதல் வெளிநாடு எது?... எகிறும் எதிர்பார்ப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: மோடி மீண்டும் பிரதமராகும் பட்சத்தில், அவர் செல்லும் முதல் வெளிநாடு பயணம் எதுவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் பிரதமராக பதவியேற்றதில் இருந்து 44 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் நரேந்திர மோடி. இந்த பயணத்தின் போது, முக்கிய நாடுகளுடன் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. அதில், முதன் முறையாக, பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நம்ஜியேல் வாங்சங்கின் அழைப்பின் பேரில் அந்நாட்டிற்கு சென்றார் பிரதமர் மோடி.

If Modi Comes Again as PM, Which is the first foreign country to go?

அப்போது, இந்தியாவிலிருந்து பூடானுக்கு பால் பவுடர், கோதுமை, சமையல் எண்ணெய், தானியங்கள், அரிசி ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதற்கான விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதே போல், பிரிக்ஸ் மாநாட்டிற்காக ரஷ்யா பயணம், அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட், உஸ்பெகிஸ்தான், ஜப்பான், சீனா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு மோடி சென்றார். ஒவ்வொரு நாட்டுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்தியாவே ஒரு பக்கம் நிற்க.. தனித்து நின்று வேறுபடும் தமிழகம்.. பாஜகவை மொத்தமாக புறக்கணித்தது! இந்தியாவே ஒரு பக்கம் நிற்க.. தனித்து நின்று வேறுபடும் தமிழகம்.. பாஜகவை மொத்தமாக புறக்கணித்தது!

பிரதமர் மோடி இதுவரை சென்றுள்ள 44 நாடுகளுக்குகான விமானச் செலவு ரூபாய் 443.4 கோடி என ஏர் இந்தியா நிறுவனம் கூறியுள்ளது. இந்தியாவில் இருந்ததை விட, வெளிநாட்டில் தான் மோடி அதிகம் இருந்துள்ளார் என்று எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து பிரச்சாரம் மேற்கொண்டன. இந்த நிலையில், பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியை தக்க வைக்கும் பட்சத்தில், 44 நாடுகளை தவிர வேறு எந்த நாடுகளுக்கு செல்வார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

2014ல் அதிமுக 37, 2019ல் திமுக 37.. பாஜக எதிர்ப்பு.. தமிழகத்தின் மரபணு என்பது மீண்டும் நிரூபணம்..! 2014ல் அதிமுக 37, 2019ல் திமுக 37.. பாஜக எதிர்ப்பு.. தமிழகத்தின் மரபணு என்பது மீண்டும் நிரூபணம்..!

English summary
Election results 2019: Which is the first foreign country to go? If Modi Comes Again as PM
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X