Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"வாய்க்கு வந்ததையெல்லாம் பேசக்கூடாது".. ராகுல் ராமர் என்றால் காங்கிரஸார் ஆடையின்றி அலைவார்களா? பாஜக

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ராகுல் காந்தி ராமபிரான் என்றால் ராமனின் சேனைகளை போல காங்கிரஸார் ஆடையில்லாமல் அலைய தயாரா? என்று பாஜக மூத்த தலைவர் துஷ்யந்த் கவுதம் கேள்வியெழுப்பியுள்ளார். . எந்தக் கட்சி ராமரை மறுதலித்ததோ, அதே கட்சி இன்றைக்கு ராமரை தூக்கிப்பிடிக்க வேண்டிய நிலைக்கு வந்துள்ளது என்றும் துஷ்யந்த் கவுதம் கூறியுள்ளார்.

ராகுல் காந்தியை ராமபிரான் என காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் கூறியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, துஷ்யந்த் கவுதம் இவ்வாறு கூறியுள்ளார்.

லோக்சபா தேர்தல் வருவதால் தோல்வி பயத்தில் என்ன பேசுவது என்று தெரியாமல், காங்கிரஸ் தலைவர்கள் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி வருகிறார்கள் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

 ராகுலை ராமருடன் ஒப்பிட்டு பேச்சு

ராகுலை ராமருடன் ஒப்பிட்டு பேச்சு


பாரத் ஜோடோ யாத்திரை உத்தரபிரதேசத்துக்கு வரவுள்ள நிலையில், சல்மான் குர்ஷித் தலைமையிலான காங்கிரஸார் அங்கு களப்பணிகளில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள செய்தியாளர்களிடம் சல்மான் குர்ஷித் பேசுகையில், "ராகுல் காந்தி கடவுள் ராமரை போன்றவர். அவரது செயல்பாடுகளை பார்த்தாலே அது உங்களுக்கு தெரியும். ரஷ்யாவுக்கு நிகராக டெல்லியில் தற்போது பனியும், குளிரும் நிலவி வருகிறது. ஸ்வட்டரும், ஜாக்கெட்டும் அணியாமல் டெல்லியில் யாராவது நடமாட முடியுமா? ஆனால், ராகுல் காந்தி சாதாரண டி ஷர்ட்டை போட்டு நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் ஒரு அசாதாரண மனிதர்" என அவர் கூறினார்.

 கொந்தளித்த பாஜக

கொந்தளித்த பாஜக

அதுமட்டுமல்லாமல், ராமபிரானின் பாதுகையை அவரது தம்பி பரதன் தூக்கிச் சென்றதை போல, ராகுல் காந்தியின் பாதுகையை நாங்கள் சுமந்து செல்கிறோம் என சல்மான் குர்ஷித் கூறினார். சல்மான் குர்ஷித்தின் இந்த பேச்சு பாஜகவினரை கொந்தளிக்க வைத்துள்ளது. இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனாவாலா கூறுகையில், "ராகுல் காந்தியை கடவுள் ராமருடனும், தங்களை பரதருடனும் ஒப்பிட்டு சல்மான் குர்ஷித் பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ராகுல் காந்தியை இதுபோல வேறு மதங்களின் கடவுள்களுடன் ஒப்பிட்டு பேச சல்மான் குர்ஷித்துக்கு தைரியம் இருக்கிறதா? ராமர் வாழ்ந்ததை மறுத்த ஒரு கட்சி.. அயோத்தியில் ராமர் கோயில் எழுப்பக்கூடாது எனக் கூறிய ஒரு கட்சி.. இன்று அதே ராமருடன் தங்கள் கட்சி தலைவரை ஒப்பிட்டு பேசுவது இந்து மதத்தை அவமதிப்பதை போன்றது" என்றார்.

 ஆடையின்றி அலைவீர்களா?

ஆடையின்றி அலைவீர்களா?

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பாஜக மூத்த தலைவர் துஷ்யந்த் கவுதமிடம் செய்தியாளர்கள் நேற்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "ராகுல் காந்தியை ராமபிரானுடன் ஒப்பிட்டு பேச வேண்டிய நிலைக்கு காங்கிரஸ் இன்று தள்ளப்பட்டிருக்கிறது. எந்தக் கட்சி ராமரை மறுதலித்ததோ, அதே கட்சி இன்றைக்கு ராமரை தூக்கிப்பிடிக்க வேண்டிய நிலைக்கு வந்துள்ளது. அதெல்லாம் சரி. ராகுல் காந்தியை ராமர் என்கிறீர்களே.. அப்படியென்றால், காங்கிரஸார் ராம சேனைகள்தானே. ராமசேனைகள் ஆடைகளின்றியே அலைந்தார்கள். அதேபோல, காங்கிரஸாரும் ஆடையில்லாமல் அலைவீர்களா?

 தோல்வி பயத்தில் உளறல்

தோல்வி பயத்தில் உளறல்

லோக்சபா தேர்தல் நெருங்குவதால் காங்கிரஸுக்கும், அதன் தலைவர்களுக்கும் தோல்வி பயம் வந்துவிட்டது. இந்த தோல்வி பயத்தின் காரணமாகவே சமீபகாலமாக அக்கட்சியின் மூத்த தலைவர்கள் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி வருகிறார்கள். ராமருடன் ராகுல் காந்தியை ஒப்பிட்டு பேசினாலாவது ஏதேனும் ஓட்டுகள் கிடைக்குமா என அவர்கள் ஏங்குகிறார்கள்" என துஷ்யந்த் கவுதம் பேசினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+