‛தக் லைஃப்' படம் ரிலீசுக்கு பாதுகாப்பு கொடுக்க ரெடி.. உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு உறுதி
டெல்லி: கர்நாடகாவில் கமல்ஹாசன் நடித்த ‛தக் லைஃப்' திரைப்படத்துக்கு தடை போட முடியாது என்று நேற்று முன்தினம் உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து கர்நாடகாவில் நடிகர் கமல்ஹாசனின் ‛தக் லைஃப்' திரைப்படம் வெளியாகும்போது சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று கர்நாடகா அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா உள்பட பல திரைப்பிரலங்கள் நடித்துள்ள திரைப்படம் ‛தக் லைஃப்'. இந்த படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கி உள்ளார். இந்த திரைப்படம் கடந்த 5ம் தேதி வெளியானது. கர்நாடகாவை தவிர பிற இடங்களில் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆனது.

கர்நாடகாவில் திரைப்படத்தை வெளியிட எதிர்ப்பு உள்ளது. இதற்கு நடிகர் கமல்ஹாசன் தான் காரணம். ரிலீசாகும் முன்பு படத்தின் இசை வெளியீட்டு சென்னையில் நடந்தது. சிறப்பு விருந்தினராக கன்னட நடிகர் சிவராஜ் குமார் பங்கேற்றார்.
அப்போது ‛‛தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம்'' என்று கமல்ஹாசன் பேசினார். இதற்கு கன்னட அமைப்பினர், கர்நாடகா திரைப்பட வர்த்தக சங்கத்தை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கன்னட அமைப்பினர் கூறினர். மன்னிப்பு கேட்டால் மட்டுமே கர்நாடகாவில் திரைப்படம் வெளியிடப்படும் என்று கர்நாடகா திரைப்பட வர்த்தக சங்கம் அறிவித்தது.
இதையடுத்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தை கமல்ஹாசன் தரப்பு அணுகியது. படத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது. கர்நாடகா உயர்நீதிமன்றமும் கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியது. இதையடுத்து கமல்ஹாசன் உச்சநீதிமன்றம் சென்றார். நேற்று முன்தினம் உச்சநீதிமன்றம் மனுவை விசாரித்தது.
அப்போது, "கர்நாடகாவில் 'தக் லைஃப்' திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது. திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். குண்டர்கள், கும்பல்கள் நமது வீதிகளை கைப்பற்ற அனுமதிக்க முடியாது. உரிய சான்றிதழ் பெற்ற பின் ஒரு திரைப்படத்தை வெளியிட எல்லாருக்கும் உரிமை உண்டு. அந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு அது வேண்டுமா, வேண்டாமா என மக்கள் முடிவு செய்யட்டும். திரைப்படத்தை வெளியிடுவதை தடை செய்ய முடியாது'' என்று கூறியது.
மேலும் இந்த விவகாரத்தில் கர்நாடகா அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து கர்நாடகா அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பிரமாண பத்திரம் மொத்தம் 3 பக்கங்களை கொண்டிருந்தது. இந்த பிரமாண பத்திரத்தை கர்நாடகா அரசு சார்பில் உள்துறையின் (சட்டம் - ஒழுங்கு) துணை செயலாளர் கும்டா பிரகாஷ் தாக்கல் செய்தார்.
அதில், ‛‛கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படத்தை வெளியிட எந்த கண்டிஷனும் விதிக்கப்படவில்லை. தக் லைஃப் திரைப்படத்தின் தயாரிப்பாளர் கர்நாடகாவில் அதனை ரிலீஸ் செய்தால் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். மக்கள் மற்றும் திரையரங்குக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் '' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சட்டமன்ற தேர்தலில் மநீம போட்டியில்லை.. திமுகவுக்கு நிபந்தனையின்றி ஆதரவு! கமல்ஹாசன் அறிவிப்பு -
கிறிஸ்தவராக மாறினால் பட்டியல் ஜாதி அந்தஸ்து + உரிமை கிடையாது.. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு -
என்னுடைய சகோதரருக்கே போன் போட்டு என் உத்தரவு பற்றி கேள்வி எழுப்புவதா? உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கோபம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்!












Click it and Unblock the Notifications