மிரட்டும் பைபர்ஜாய் புயல்.. ரயில்சேவை ரத்து செய்யப்படுமா? பயணிகளுக்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு
டெல்லி: பைபர்ஜாய் புயல் கரையக் கடக்கும் போது மணிக்கு 50 கி. மீட்டருக்கு மேல் காற்று வீசினால் ரயில்கள் நிறுத்தப்படும் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. பைபர்ஜாய் புயல் வரும் 15 ஆம் தேதி கரையக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரபிக்கடலில் உருவான பைபர்ஜாய் புயல் வரும் 15 ஆம் தேதி கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள பைபர்ஜாய் நேற்று வடக்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 08:30 மணியளவில் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் போர்பந்தருக்கு தென்மேற்கே சுமார் 320 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.

இந்த புயல் நாளை மறுநாள் காலை வரை வடக்கு திசையிலும், அதன் பிறகு, வடக்கு - வடகிழக்கு திசையிலும் நகர்ந்து சவுராஷ்டிரா- கட்ச் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பாகிஸ்தான் கடற்கரை பகுதிகளில் வரும் 15 ஆம் தேதி நண்பகல், மிக தீவிர புயலாக, குஜராத்தில் உள்ள மாண்டிவி மற்றும் பாகிஸ்தானின் கராச்சி இடையே, ஜக்காவு துறைமுகம் அருகே கரையை கடக்கக்கூடும் எனவும் புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் காற்றின் வேகம் மணிக்கு 125-135 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 150 கிலோ மீட்டர் வேகத்திலும் இருக்கக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த தென்மேற்கு பருவமழை சீசனில் உருவான முதல் புயல் பைபர்ஜாய் புயல். இந்த புயலுக்கு வங்கதேசம் வைத்துள்ள பெயர் வைக்கப்பட்டுள்ளது. பைபர்ஜாய் என்றால் வங்கத்தில் பேரழிவு என்பது பொருளாகும். புயல் காரணமாக மீனவர்கள் ஆழ்கடல் பகுதிகளில் மீன் பிடிக்க சென்றிருந்தால் அவர்கள் உடனடியாக கரை திரும்புமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில பேரிடர் மீட்பு படை குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, பைபர்ஜாய் புயல் காரணமாக ரயில் சேவையும் பாதிக்கப்படும் எனத் தெரிகிறது. புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 50 கி.மீக்கு மேல் காற்றின் வேகம் இருந்தால் ரயில்களை ஒழுங்குப்படுத்த அல்லது நிறுத்துவதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என இந்திய ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறப்பட்டிருப்பதாவது:-

அதிதீவிர நிலையில் உள்ள 'பைபர்ஜாய்' புயல் சவுராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளை பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாவ்நகர், மஹுவா, வெராவல் முதல் போர்பந்தர் பகுதி, ஓகா முதல் ஹாபா வரை மற்றும் காந்திதாம் பகுதி ஆகிய பகுதிகள் பாதிக்கப்படலாம் என வானிலை முன்னறிவிப்புகள் கூறுகின்றன.
காற்றின் வேகம் மணிக்கு 50 கி.மீ மேல் இருந்தால் ரயில்களை ஒழுங்குபடுத்த அல்லது நிறுத்துவதற்கான அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் அனிமோமீட்டர்கள் பொருத்தப்பட்டு, காற்றின் வேகம் கணக்கிடப்பட்டு வருகிறது. பயணிகள் தங்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படும்பட்சத்தில் அருகில் உள்ள ரயில் நிலையங்களை தொடர்பு கொள்ளலாம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications