கர்மாவை நீங்க நம்பலன்னா.. வீடியோ வெளியிட்டு ஆனந்த் மகிந்திரா என்ன சொல்லியிருக்கார் பாருங்க
டெல்லி: கர்மா, தலைவிதி மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால் இந்த வீடியோ உங்களை யோசிக்க வைக்கும் என்று பிரபல தொழில் அதிபர் ஆனந்த் மகிந்திரா, தனது ட்விட்டரில் வீடியோவுடன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் மோட்டார் வாகன உற்பத்தி உள்பட பல துறைகளில் கோலோச்சும் நிறுவனம் மகிந்திரா. இந்த நிறுவனத்தின் தலைவரான ஆனந்த் மகிந்திரா சமூக வலைத்தளங்களிலும் அடிக்கடி கருத்துக்களை பதிவிட்டு ட்விட்டரில் படு ஆக்டிவாக இருக்கக் கூடியவர். ஆனந்த் மகிந்திராவின் ட்விட் பதிவுகள் பெரும்பாம்பாலும் நெட்டிசன்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்கும்.

தனக்கு பிடித்தமான துணுக்குகள், தன்னம்பிக்கை ஊட்டும் வீடியோக்கள், எளிய பின்னணியில் இருந்து சாதிக்கும் நபர்கள், தான் கண்டு வியந்து பார்த்த இடங்கள் என பல விவகாரங்கள் குறித்து ஆனந்த் மகிந்திரா தனது ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார். இவருக்கு ட்விட்டரில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்று சொல்லலாம்.
அந்த அளவுக்கு ஆனந்த் மகிந்திராவின் ட்விட்கள் பெரும்பாலானவை சமூக வலைத்தலங்களில் அதிகம் பரவும். ஆனந்த் மகிந்திராவை ட்விட்டரில் சுமார் 1 கோடிக்கும் மேற்பட்டோர் ஃபாலோ செய்கின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பாக சிந்து சமவெளி நாகரீகம் பற்றி ஆனந்த் மகிந்திரா பதிவிட்ட ஒரு ட்விட் இணையத்தில் பெரிதும் கவனம் பெற்றது.
பாகுபலி இயக்குநர் ராஜமெளலியிடம், சிந்து சமவெளி காலகட்டம் தொடர்பாக ஒரு திரைப்படத்தை எடுப்பது பற்றி பரிசீலிக்குமாறு கூறியிருந்தார். தொன்மை வாய்ந்த இந்த நாகரீகம் சர்வதேச அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தும்" என்றும் பதிவிட்டு இருந்தார். ராஜமெளலியும் சிந்து சமவெளி நாகரீகத்தில் வளர்ச்சி மற்றும் வீழ்ச்சியை பற்றி ஒரு கதை யோசித்ததாகவும் பதில் கொடுத்து இருந்தார்.
ஆனந்த் மகிந்திராவின் இந்த ட்விட் இணையத்தில் நெட்டிசன்களால் அதிகம் விவாதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், ஆனந்த் மகிந்திரா இன்று வெளியிட்டு இருக்கும் பதிவும் நெட்டிசன்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது. வீடியோ ஒன்றுடன் இணைத்து ஆனந்த மகிந்திரா பதிவிட்ட ட்விட் பதிவில், " கர்மா, தலைவிதியை நீங்கள் நம்பவில்லை என்றால், இந்த வீடியோ உங்களை மீண்டும் யோசிக்க வைப்பதாக இருக்கும்" எனக்கூறி வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.

அந்த வீடியோவில் கேட்டின் அருகே நின்று கொண்டு இருக்கும் நபர் ஒருவர் கேட்டை திறப்பது போல ஏதோ செய்து கொண்டு இருக்கிறார். ஆனால், அவரது முயற்சிக்கு பலன் கிடைக்காததால் டென்ஷனில் அங்கிருந்து நகர்ந்து செல்கிறார். மறுநொடியே அசூர வேகத்தில் வந்த ஒரு கார் பயங்கரமாக அந்த கேட்டின் மீது மோதியதோடு அங்கு இருந்த இரும்பு போஸ்டில் இடித்து நிற்கிறது.
சில வினாடிகளுக்கு முன்புதான் அந்த நபர் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். அவர் மட்டும் அதேவழியாக சென்றாலோ.. அந்த கேட்டை திறந்து கொண்டிருந்தாலோ.. கார் மோதி பெரும் விபத்தில் சிக்கியிருக்க நேரிடும். ஆனால், அதிர்ஷ்டவசமாக கடவுளின் செயல் என்பார்களே அது போல அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டார்.

இதனால், அவர் பெரும் விபத்தில் இருந்து தப்பினார். இந்த வீடியோவோடு ஆனந்த் மகந்திரா, கர்மா மற்றும் தலைவிதி குறித்த தனது பார்வையை தெரிவித்து இருக்கிறார். ஆனந்த் மகிந்திராவின் இந்த ட்விட் பதிவுக்கு கீழாக நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications