டிசிஎஸ் வேலைக்கு நோ.. சிவில் சர்வீஸுக்கு எஸ்.. ஐஐடி மாணவர் 1980 இல் பெற்ற ஆஃபர் லெட்டர் வைரல்
டெல்லி: ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி, 1989 ஆம் ஆண்டில் டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து தனக்கு வந்த முதல் வேலையை நிராகரித்துவிட்டு சிவில் சர்வீஸை தேர்ந்தெடுத்த நிலையில், 40 ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஆஃபர் லெட்டரை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவரது இந்தப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
ராஜஸ்தான் கேடரைச் சேர்ந்த 1989 வது பேட்ஜிஸ் பணியாற்றியவர் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான ரோஹித் குமார் சிங். இவர் 40 ஆண்டுகளுக்கு முன்பு டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து தனக்கு வந்த முதல் ஆஃபர் லெட்டரை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். கார்ப்பரேட் வேலைகள் கிடைப்பதே அரிதாக இருந்த அந்த காலகட்டத்தில் ரோஹித்துக்கு 1,300 ரூபாய் சம்பளம் தருவதாக உறுதி அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால், ரோஹித் குமார் சிங் டிசிஎஸ் நிறுவனத்தில் கிடைத்த வேலையில் சேராமல், சிவில் சர்வீஸையே தேர்ந்தெடுத்தார். 1989 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக சேர்ந்த அவருக்கு ஆரம்ப சம்பளம் 2,200 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 40 ஆண்டுகளுக்கு முன்பு ஐஐடி பிஹெச்யூவில் கேம்பஸ் இன்டர்வியூ மூலமாக மும்பையில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் எனக்கு முதல் வேலை கிடைத்தது. 1300 ரூபாய் சம்பளத்துடன் நாரிமன் பாயிண்டில் உள்ள ஏர் இந்தியா கட்டடத்தின் 11 வது மாடியில் இருந்து கடலைப் பார்க்கும் அந்த காட்சி மிகவும் அழகாக இருந்தது என்று பதிவிட்டுள்ளார்.
டிசிஎஸ் நிறுவனத்தின் ஆஃபர் லெட்டரையும் அந்தப் பதிவில் இணைத்துள்ளார். 1989 காலகட்டங்களில் மிகப்பெரிய விஷயமாக மதிக்கப்பட்ட கார்ப்பரேட் வேலையை ரோஹித் குமார் சிங் தேர்வு செய்யாமல், சிவில் சர்வீஸ் மூலம் தேசத்திற்கு சேவையாற்ற அவர் முடிவு செய்ததை பலரும் பாராட்டி வருகின்றனர்.

ரோஹித் குமார் சிங்கின் இந்த எக்ஸ் தள பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. தேசத்திற்கு சேவை செய்வதற்கு முன்னுரிமை அளித்த ரோஹித்தின் செயல் பாராட்டுதலுக்குரியது என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அதில் ஒரு எக்ஸ் பயனர், நீங்கள் ஒரு வேளை டிசிஎஸ் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்திருந்தால் உங்களுடைய பார்வை இப்போது எப்படி இருந்திருக்கும். வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் சேர முயற்சிப்பீர்களா. சும்மா ஒரு ஆர்வத்துக்காக கேட்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மற்றொரு பயனர், 40 ஆண்டுகளுக்கு 1300 ரூபாயை எஃப்.டி.யில் போட்டிருந்தால் 8 சதவீதம் வட்டி என கணக்கிட்டால் 28 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். ஆனால், 2024 இல் புதிதாக சேருபவர்களுக்கே டிசிஎஸ் 16 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்குகிறது. அதனால், நீங்கள் டிசிஎஸ் வேலையை நிராகரித்ததே நல்லது. உங்கள் கேரியரை அது கொன்றிருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.
அதிக சம்பளம் தரும் கார்ப்பரேட் வேலையைவிட சிவில் சர்வீஸ் சேவை வாழ்க்கையே மிகப்பெரியது.. மன நிறைவானது என்பதை ரோஹித் குமார் சிங்கின் அந்தப் பதிவு வெளிப்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications