வாங்க உங்களுக்கு பனிஷ்மெண்ட் இருக்கு! 8 எம்பிக்களை திடீரென அழைத்த மோடி! சர்ப்பிரைஸ்! சுவாரசியம்
டெல்லி: பிரதமர் மோடி இன்று நாடாளுமன்ற வளாகத்தில் 8 எம்பிக்களை திடீரென்று அழைத்துள்ளார். எம்பிக்களும் பிரதமரிடம் இருந்து சர்பிரைஸ் அழைப்பு வந்து இருப்பதால் என்ன விஷயமாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே சென்றுள்ளனர். அப்படி என்ன தான் பிரதமர் மோடி எம்பிக்களிடம் பேசினார் என்பது பற்றி இங்கே பார்ப்போம்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 31 ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் கூடியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அதன்பிறகு 1 ஆம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மோடியின் 2-வது ஆட்சி காலத்தில் தாக்கல் செய்யப்படும் கடைசி பட்ஜெட் இதுவாகும். விரைவில் தேர்தல் நடக்க இருப்பதால் இந்த முறை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

தேர்தலுக்கு பிறகு பொறுப்பேற்கும் புதிய அரசு மீண்டும் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும். தேர்தலுக்கு முன்பான பாராளுமன்ற கூட்டத்தொடர் என்பதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. எதிர்க்கட்சிகள் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக வரிந்து கட்டி நிற்கும் நிலையில், பாஜக அரசும் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.
8 எம்பிக்களுக்கு சர்ப்ரைஸ்: இவ்வாறாக நாடாளுமன்றத்தில் அனல் பறக்கும் விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த பரபரப்புக்கு இடையே சில நேரம் சுவாரசியமான நிகழ்வுகளும் அரங்கேறுகின்றன. அந்த வகையில்தான் பிரதமர் மோடி இன்று நாடாளுமன்றத்தில் 8 எம்பிக்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். இது குறித்த விவரம் வருமாறு:-

பனிஷ்மெண்ட் கொடுக்க போறேன்: இன்று மதியம் லஞ்ச் நேரம் நெருங்கி கொண்டு இருந்தது. நாடாளுமன்றத்தில் உள்ள 8 உறுப்பினர்களுக்கு திடீரென பிரதமர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு போயுள்ளது. பாஜக எம்பிக்கள் மட்டும் இன்றி பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்பிக்களுக்கும் அழைப்பு போனது. பாஜக எம்பிக்களான ஹீனா காவித், எஸ். பன்கோன் கோன்யாக், ஜம்யாங் டெஷரிங் நம்க்யால், எல்.முருகன், தெலுங்கு தேசம் கட்சி ராம்மோகன் நாயுடு, பகுஜன் சமாஜ்வாடி ரிதேஷ் பாண்டே, பிஜு ஜனதா தளம் சஸ்மிதி பத்ரா ஆகிய எம்பிகளுக்குதான் பிற்பகல் 2.30 மணிக்கு தொலைபேசி அழைப்பு போயுள்ளது.
பிரதமர் மோடி உங்களை சந்திக்க விரும்புகிறார் என்று அவர்கள் தொலைபேசியில் தகவல் கொடுக்கப்பட்டது. சற்று நேரத்தில் அங்கு வந்த பிரதமர் மோடி, வாங்க போகலாம்.. உங்களுக்கு ஒரு பனிஷ்மண்ட் கொடுக்க போறேன் என்று ஜாலியாக அரட்டை அடித்தபடி அழைத்து சென்றுள்ளார். லிப்ட்டில் சென்ற எம்பிக்கள் நேராக கேண்டீனுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அதன்பிறகுதான் எம்பிக்களுக்கும் பிரதமர் அழைத்தது ஏன் என்று புரியவந்துள்ளது.

எனக்கு கிச்சடிதான் பிடிக்கும்: பிரதமர் மோடி அவர்களுடன் ஒரே மேஜையில் அமர்ந்து மதிய உணவு உட்கொண்டுள்ளார். அப்போது பிரதமர் மோடி மிகவும் எளிமையாக கலந்துரையாடினார். பிரதமர், எம்பிக்களிடம் கூறுகையில், எனக்கு கிச்சடிதான் மிகவும் பிடித்தமான உணவு. நான் எப்போதும் பிரதமர் என்ற மோடில் இருக்க மாட்டேன். நல்ல உணவை சாப்பிட நினைத்தேன்"என்று சொன்னார்.
அப்போது எம்பிக்களும் பிரதமர் மோடி எப்போதும் பரபரப்பாக செயல்படுவது குறித்து கேட்டு இருக்கிறார்கள். அதாவது, வெளிநாட்டு பயணம், அரசு அலுவல்கள் என படு பிசியாக இருப்பது குறித்தும் குஜராத் குறித்தும் எம்பிக்கள் மோடியிடம் கலந்துரையாடியுள்ளனர். நாடாளுமன்றத்தில் இப்படி சர்ப்ரைஸ் ஆக பிரதமரை சந்தித்தது நல்ல அனுபவமாக இருந்தது என்று பிரதமரை சந்தித்த எம்பி ஒருவர் கூறினார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications