நவம்பர் 9,10 இல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகம் நோக்கி நகரும்.. இந்திய வானிலை மையம்
டெல்லி: நவம்பர் 9,10 ஆம் தேதிகளில் தென் கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் அது தமிழகத்தை நோக்கி நகரும் என்றும் இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை கடந்த 25-ந் தேதி தொடங்கியது. 3 நாட்களுக்கு முன்னதாகவே பருவமழை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. தெற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி கடந்த 27-ஆம் உருவானது.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 3 தினங்களுக்கு மேற்கு நோக்கி நகர்ந்து தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்தது. இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதேபோல உள் மாவட்டங்களிலும் மழை பெய்தது.

வடகிழக்கு பருவமழை
இந்த காற்றழுத்த தாழ்வு நிலை தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களில் நல்ல மழையை கொடுத்தது. அது போல் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதால் இனி அடுத்தடுத்து காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி நல்ல மழையை தரும் என வானிலை மையம் தெரிவித்தது.

தமிழகத்தில் மழை
தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இந்த நிலையில் புதியதொரு காற்றழுத்த தாழ்வு பகுதி குறித்து வானிலை மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நவம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் தென் கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
Recommended Video

தமிழகம்
அந்த புதிய காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகம் நோக்கி நகரும். இதனால் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிக்கு நவம்பர் 9, 10, 11, 12 ஆகிய தேதிகளில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம். ஆழ் கடலில் மீன் பிடிக்க சென்றவர்கள் வரும் நவம்பர் 9-ஆம் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும். காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் வடதமிழகத்திற்கு அதீத மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

புயல்
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, பின்னர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி இதைத் தொடர்ந்து புயலாக மாறும். இந்த புயல் சூப்பர் புயலாக மாறவும் வாய்ப்புள்ளது, எனவே வங்கக் கடலில் புதிதாக உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications