தீவிர புயலாக இருந்த யாஸ் ஆழ்ந்த காற்றழுத்தமாக வலுவிழந்தது- இந்திய வானிலை மையம்
டெல்லி: தீவிர புயலாக இருந்த யாஸ் புயல் தற்போது ஆழ்ந்த காற்றழுத்தமாக வலுவிழந்துவிட்டதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் கடந்த 24 ஆம் தேதி யாஸ் புயல் உருவானது. இந்த புயல் ஒடிஸா- மேற்கு வங்கம் இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் நேற்று முன் தினம் மாலை இந்த புயல் அதி தீவிர புயலாக மாறியது. பின்னர் நேற்று காலை பாலசோர் அருகே கரையை கடக்க தொடங்கியது. இந்த புயல் முழுவதுமாக கரையை கடக்க மதியம் ஆகிவிட்டது.
புயல் கரையை கடந்த போது மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், ஒடிஸா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்தது. புயலின் வேகம் மணிக்கு 140 கி.மீ முதல் 155 கி.மீ. வரை இருந்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கின. மரங்கள் வேரோடு சாய்ந்தன.
இந்த நேற்று மாலைக்கு மேல் தீவிர புயலாக வலுவிழந்தது. இதுகுறித்து இந்திய வானிலை மையம் கூறுகையில், தீவிர புயலாக இருந்த யாஸ், தற்போது ஆழ்ந்த காற்றழுத்தமாக வலுவிழந்துள்ளது. அது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்தமாக மாறக்கூடும் என தெரிவித்துள்ளது.
இந்த புயலால் 5 பேர் இறந்தனர். மேற்கு வங்கத்தில் 1,100 கிராமங்களை சுற்றி வெள்ளநீர் உள்ளது. ஒடிஸாவில் 120 கிராமங்கள் மழை நீரால் அடித்துச் செல்லப்பட்டன. எனினும் அங்கிருந்த மக்கள் ஏற்கெனவே பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications