2021ல மட்டும் இந்தியா ஆசிய வங்கியில் வாங்கிய கடன் எவ்வளவு தெரியுமா? கொரோனாவுக்கு மட்டும் இவ்வளவா?
டெல்லி : கடந்த 2011ஆம் ஆண்டில் ஆசிய வங்கியிடமிருந்து இந்தியா 4.6 பில்லியன் அமெரிக்க டாலர் தொகையை கடனாகப் பெற்றுள்ளதாக ஆசிய மேம்பாட்டு வங்கி தெரிவித்துள்ளது.
ஆசிய வளர்ச்சி வங்கி எனப்படும் ஏசியன் டெவலப்மன்ட் பேங்க் 1966 ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரில் நிறுவப்பட்டது. இந்தியா உள்ளிட்ட அறுபத்தி ஏழு நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட வங்கி சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க கடன்கள் தொழில்நுட்ப உதவி ஆகியவற்றுக்காக உதவுகிறது.
ஆசிய பசிபிக் பகுதியில் உள்ள நாடுகளிடம் வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பை வளர்ப்பதே ஆசிய மேம்பாட்டு வங்கியின் முதன்மை நோக்கம் என கூறப்படும் நிலையில் கடந்த காலத்தில் பல்வேறு நாடுகளுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி பெரும் தொகையை கடனாக வழங்கியுள்ளது.

இந்தியாவின் கடன்
இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு 4.6 பில்லியன் டாலர்களை ஆசிய வளர்ச்சி வங்கி கடனாக வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் கொரோனா வைரஸ் பாதிப்பை சமாளிக்கும் வகையில் 1.8 பில்லியன் டாலர்களை வழங்கி உள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஒரு நிறுவனத்தின் அறிக்கையில், ஆசிய வளர்ச்சி வங்கி 2021 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு 4.6 பில்லியன் டாலர் இறையாண்மைக் கடனாக 17 கடன்களை வழங்கியது எனவும், இதில் நாட்டின் கொரோனா வைரஸ் நோய் தொற்றுநோய்க்காக மட்டும் 1.8 பில்லியன் டாலர் வழங்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது

ஆரம்ப சுகாதார சேவை
ஆசிய வங்கி கொரோனா நோய் தொற்றை சமாளிக்கவும் தடுப்பூசி கொள்முதலுக்காகவும் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்களையும், 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நகர்ப்புறங்களில் ஆரம்ப சுகாதார சேவையை வலுப்படுத்தவும், நாட்டின் எதிர்கால தொற்றுநோய்க்கான தயார்நிலைக்காகவும் ஒதுக்கப்பட்டது. ஆசிய மேம்பாட்டு வங்கியின் இந்தியாவிற்கான வழக்கமான நிதியுதவித் திட்டம் போக்குவரத்து, நகர்ப்புற மேம்பாடு, நிதி, விவசாயம் மற்றும் திறன் மேம்பாட்டிற்கு ஆதரவாக உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வங்கியின் இந்தியாவுக்கான இயக்குனர் டேக்கோ கோனிஷி கூறுகையில், கொரோனாவுக்கு எதிரான இந்திய அரசின் போராட்டத்திற்கும், நகரமயமாக்கலை நிர்வகித்தல், தொழில்துறை போட்டித்தன்மையை உயர்த்துதல், அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், இணைப்பை மேம்படுத்துதல் மற்றும் திறன்களை மேம்படுத்துதல் போன்ற அதன் பிற வளர்ச்சி முன்னுரிமைகளுக்கும் எங்களது வங்கியின் செயல்பாடுகள் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றன எனக் கூறியுள்ளார்.

தொடர்ந்து ஆதரவு
இந்தியாவின் செயல்பாடுகளின் வளர்ச்சி தாக்கத்தை அதிகரிக்க, தங்களது வங்கி பல்துறை அணுகுமுறையை ஏற்றுக்கொள்கிறது எனவும், அதன் ஒப்பீட்டு நன்மை, அறிவுத் தளம் மற்றும் மதிப்பு கூட்டல் ஆகியவற்றின் அடிப்படையில் ஃபைனான்ஸ் பிளஸ் கூறுகளை ஒருங்கிணைக்கிறது என்று கூறிய கோனிஷி, பொருளாதார ரீதியாக முன்னேறிய மாநிலங்களில் மாற்றத்தக்க முதலீடுகளைத் தொடரும் அதே வேளையில், அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் நிறுவன திறன் மேம்பாடு ஆகியவற்றின் மூலம் குறைந்த வளர்ச்சியடைந்த மாநிலங்களுக்கு தங்கள் வங்கி தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றார்.

சென்னை பெங்களூரு
12 மாநில திட்டங்களுக்கு 2.2 பில்லியன் டாலர் ஆதரவை தங்களது வங்கி வழங்கியது எனவும், தண்ணீர், சுகாதாரம் மற்றும் மலிவு விலையில் வீட்டுவசதிக்கான அணுகலை மேம்படுத்துவதற்கும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு செயல்திறன் அடிப்படையிலான நிதி பரிமாற்றத்தை மேம்படுத்துவதற்கும் இந்தியாவின் தேசிய நகர்ப்புற முதன்மையான பணிகளுக்கு நிதியளிப்பது ஆகியவற்றுக்கான கடனும் இதில் அடங்கும் . மேலும், பெங்களூரில் மெட்ரோ நெட்வொர்க் விரிவாக்கம் , சென்னையின் நகர்ப்புறங்களில் வெள்ள அபாய மேலாண்மையை வலுப்படுத்துதல் ஆகியவற்றிற்கும் இத்தொகையில் பெரும்பகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications