Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அக்னிபாத்தால் பற்றி எரியும் பீகார்! யோ என்னயா பண்றீங்க! பரபரவென களமிறங்கிய பிரசாந்த் கிஷோர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தால் ரயில்கள், வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டு வன்முறை நடக்கும் நிலையில் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் களமிறங்கியுள்ளார். இதுதொடர்பாக அவர் பாஜக, நிதிஷ் குமாரின் ஜேடியூ கட்சிகளை சரமாரியாக விமர்சித்துள்ளார்.

பீகாரில் பாஜக, ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு ஐக்கிய ஜனதாதளம்(ஜேடியூ) கட்சியின் நிதிஷ் குமார் முதல் அமைச்சராக உள்ளார்.

இந்நிலையில் சமீப காலமாக பாஜக, ஐக்கிய ஜனதாதளம் கட்சிகள் இடையே மோதல் உள்ளது. இருகட்சி தலைவர்களும் பரஸ்பரம் விமர்சனம் செய்து கொள்வதும் அடிக்கடி நடக்கிறது. இதனால் இருகட்சிகளின் கூட்டணி நீடிக்குமா? இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் இருகட்சிகளும் தொடர்ந்து கூட்டணி ஆட்சியை நடத்தி வருகின்றன.

 பிள்ளையார் சுழி போட்ட பீகார்

பிள்ளையார் சுழி போட்ட பீகார்

இந்நிலையில் தான் மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்துக்கு முதல் முதலாக பீகாரில் தான் எதிர்ப்பு கிளம்பியது. இந்த திட்டத்தை திரும்ப பெற வேண்டும். பழைய முறையிலேயே ஆள்சேர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் பீகார் இளைஞர்கள் தான் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அக்னிபாத் திட்டம் தொடர்பான அறிவிப்பு ஜூன் 14ல் வெளியான நிலையில் ஜூன் 15ல் பீகாரில் போராட்டங்கள் வெடித்தன. இந்த போராட்டம் உத்தர பிரதேசம், தெலங்கானா, ஜார்கண்ட் உள்பட பல மாநிலங்களுக்கும் பரவியது. ரயில்கள் எரிப்பு, வாகனங்கள் சேதம், சாலை மறியல் என போராட்டம் தொடர்கிறது.

 பீகாரில் தொடரும் போராட்டம்

பீகாரில் தொடரும் போராட்டம்

பீகாரில் நேற்று 4வது நாளாக போராட்டம் நடந்தன. இன்று 5வது நாளாகவும் போராட்டக்காரர்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அக்னிபாத் போராட்டத்தில் ஆக்ரோஷமாக பீகாரில் தான் நடந்துள்ளது. இங்கு ஏராளமான பொதுச்சொத்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. ரயில், பஸ் சேவை பாதிக்கப்பட்ட நிலையில், 10க்கும் அதிகமான மாவட்டங்களில் இண்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

 பிரசாந்த் கிஷோர் விமர்சனம்

பிரசாந்த் கிஷோர் விமர்சனம்

இந்நிலையில் தான் அக்னிபாத் திட்டம் தொடர்பாக பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பாஜக, ஐக்கிய ஜனதாதளம் கட்சிகளை விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி பிரசாந்த் கிஷோர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: அக்னிபாத்தில் கிளர்ச்சி வேண்டும். வன்முறை, நாசவேலை இருக்கக்கூடாது. பீகாரை பொறுத்தமட்டில் பாஜக, ஜேடியூ(ஐக்கிய ஜனதாதளம்-நிதிஷ்குமார் கட்சி) கட்சிகளின் மோதல் சுமைகளை மக்கள் சுமக்கின்றனர். பீகார் தீப்பற்றி எரிந்தாலும் இருகட்சிகளின் தலைவர்களும் பிரச்சனையை தீர்க்காமல் ஒருவரையொருவர் குற்றம்சாட்டுகின்றனர்'' என விமர்சனம் செய்துள்ளார்.

 பீகாரில் பாதயாத்திரை

பீகாரில் பாதயாத்திரை

சமீபத்தில் பீகாரின் சம்பாரனில் இருந்து 'ஜன் சுராஜ்' என்ற பெயரில் அக்டோபர் 2ல் 3,000 கிமீ தூரம் பாதயாத்திரை துவங்க உள்ளதாக பிரசாந்த் கிஷோர் அறிவித்தார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛டுத்த மூன்று-நான்கு ஆண்டுகளுக்கு நான் மக்களை நேரடியாகச் சென்று சந்திப்பேன். எனக்கு இப்போது கட்சியோ, மேடையோ இல்லை. பீகாருக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணமும் ஆர்வமும் மட்டுமே உள்ளது'' என தெரிவித்து இருந்தார். இதனால் பிரசாந்த் கிஷோர் பீகார் அரசியலில் கவனம் செலுத்த உள்ளதாக யூகங்கள் கிளம்பிய நிலையில் தான் பீகாரை ஆட்சி செய்யும் பாஜக, ஐக்கிய ஜனதாதளம் கூட்டணியை பிரசாந்த் கிஷோர் விமர்சனம் செய்துள்ளார்.

காங்கிரஸில் இணைய மறுப்பு

காங்கிரஸில் இணைய மறுப்பு

முன்னதாக பிரசாந்த் கிஷோர் சமீபத்தில் சோனியா காந்தியை சந்தித்து குஜராத், சத்தீஸ்கர், 2024 மக்களவை தேர்தல் தொடர்பான வியூகங்கள், ஆலோசனைகளை வழங்கினார். இதையடுத்து பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைவதாக கூறப்பட்டது. ஆனால் இதற்கு அவர் மறுத்துவிட்டார். அதன்பிறகு புதிய கட்சியை பிரசாந்த் கிஷோர் துவங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதையும் அவர் மறுத்த நிலையில் தான் பீகாரில் ஜன்சுராஜ் பெயரில் பாதயாத்திரை நடத்த உள்ளதாக அவர் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+