Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ச்சே என்ன மனுஷன்யா! நெட்டிசன்களை நெகிழ வைத்த ஷோரூம் இன்சார்ஜ்! அந்த குழந்தைகளின் கண்களை பாருங்களேன்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பலரின் வீடுகளில் இன்று டிவி வந்து விட்டாலும் சிலரின் வீடுகளில் டிவி இன்னும் எட்டாக்கனியாகவே இருக்கிறது. இந்நிலையில் வடமாநிலத்தில் டிவி ஷோரூம் நடத்தி வரும் நபர் ஒருவர் ஒவ்வொரு நாளும் மாலையில் அப்பகுதியில் உள்ள ஏழை குழந்தைகளுக்காக ஷோரூமில் உள்ள டிவியில் கார்டுன் படங்களை போட்டு காட்டுகிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கௌதம் திரிவேதி எனும் டிவிட்டர் பயனர் இது தொடர்பான வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பதிவிட்ட சிறிது நேரத்திலேயே 2.9 லட்சம் பேர் பார்த்திருக்கின்றனர். மட்டுமல்லாது சுமார் 12 ஆயிரத்திற்கும் அதிகமானோர் லைக்குகளை தெரிவித்துள்ளனர். அதிக அளவில் ரீட்வீட்டும் செய்யப்பட்டுள்ளது. வீடியோவில் இரண்டு சிறுமிகள் ஷோரூமின் வாசலில் அமர்ந்திருக்கின்றனர்.

ஷோரூமின் இன்சார்ஜாக இருக்கும் இளைஞர் ஒருவர் சிறுமிகளிடம் வந்து என்ன பார்க்க விரும்புகிறீர்கள் என்று கேட்கிறார். இதனையடுத்து அவர்கள் சொல்லும் சேனலை ரிமோட் மூலம் மாற்றுகிறார். சிறுமிகள் இந்த முறை 'டாக்கிங் டாம்' எனும் கார்ட்டூனை பாரக்க விருப்பப்படுவதாக கூறியுள்ளனர். இதனையடுத்து ஷோரூம் இன்சார்ஜூம் சிறுமிகள் கேட்ட கார்ட்டூன் படத்தை போட்டுவிடுகிறார். பின்னர் இரண்டு சிறுமிகளும் இந்த கார்டூனை வேடிக்கை பார்த்தவாறு அமர்ந்திருக்கிறார்கள்.

வீடியோ

வீடியோ

இந்த விடியோவை பார்த்த நெட்டிசன்கள், மனிதம் இன்னும் மறிக்கவில்லை என்றும், இவர்கள் மூலமாக மனிதம் உயிர்ப்புடன் இருக்கிறது எனவும் கூறியுள்ளனர். அதேபோல தாங்கள் சிறுவர்களாக இருக்கும் போது இவ்வாறு கார்ட்டூன் பார்ப்பதற்காக எதிர்கொண்ட பிரச்னைகள் குறித்தும் பகிர்ந்திருக்கின்றனர். தாங்கள் சிறுவர்களாக இருந்தபோது டிவி யாராவது ஒருவருடைய வீட்டில் மட்டும்தான் இருக்கும் என்றும் எனவே அவர்கள் வீட்டின் வாசலில் இது போன்று கார்ட்டூன்களை பார்க்க நெடுநேரம் காத்திருந்தது நினைவிருக்கிறது என்றும் கூறியுள்ளனர்.

ஆண் தேவதை

ஆண் தேவதை

மேலும் சிலர், "இது போன்ற நல்ல மனிதர்கள் நாங்கள் வாழ்ந்த காலத்தில் இருந்திருந்தால் நாங்கள் அடிக்கடி கவலையடைந்திருக்க மாட்டோம். டிவி உள்ள வீடுகளை தேடி சென்று அவமானப்பட்டிருக்க மாட்டோம். மட்டுமல்லாது இந்த ஷோரூம் இன்சார்ஜ் அந்த சிறுமிகளின் விருப்பத்தை கேட்டு அதற்கேற்றவாறு சேனலை வைக்கிறார். அளவற்ற அன்பை கொண்ட மனிதர்கள்தான் இதுபோன்று செய்வார்கள். நம்மில் எல்லோருக்கும் கருணை இருக்கும், ஆனால் அளவற்ற அன்பு இருக்குமா என்று சொல்ல முடியாது. இந்த ஷோரூம் இன்சார்ஜை நான் மனதார பாராட்டுகிறேன்" என்று கூறியுள்ளனர்.

இதற்கு முன்னர்

இதற்கு முன்னர்

இந்த வீடியோ குறித்து ஷோரூம் இன்சார்ஜை பாராட்டியுள்ள பிரபல புகைப்பட கலைஞரான 'அதுல் கஸ்பேகர்', "அழகாக இருக்கிறது. கருணையோடும், சிந்தனையோடும் இருப்பதுதான் உண்மையான மதம்" என்று கூறியுள்ளார். இதற்கு முன்னர் இதேபோல ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி நெட்டிசன்களை நெகிழ்ச்சியடைய வைத்தது. அதாவது, டெல்லியின் பரபரப்பான சாலை பைக்கில் இளைஞனுடன் இளம்பெண் ஒருவர் பயணித்துக்கொண்டிருக்கிறார். அப்படி இருக்கையில், சிக்னலில் வண்டி வந்து நின்றுள்ளது. அப்போது சிறுவன் ஒருவன் யாசகம் கேட்டு வருகிறான்.

அன்பு

அன்பு

பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த அந்த இளம்பெண் சிறுவனை அருகில் அழைக்கிறாள். அழைத்து ஏதோ பேசுகிறாள். பின்னர் சிறுவனிடம் ரூபாய் நோட்டை கொடுக்கிறாள். இதனையடுத்து சிறுவன் அங்கிருந்து நகர எத்தனிக்கையில் மீண்டும் அவனை அருகில் அழைத்து அவனுடைய கன்னங்களை பிடித்து கிள்ளுகிறாள். இதனை சற்றும் எதிர்பார்க்காத சிறுவன் புன்னகைத்தவாறே அங்கிருந்து நகர்ந்து செல்கிறான். இந்த வீடியோவில் இளம்பெண்ணின் முகம் தெளிவாக தெரியவில்லை. இருப்பினும் அவளது செய்கைகள் நெட்டிசன்களை நெகிழ செய்துவிட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+