4 நாள் விடுமுறை வேண்டும்.. பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பிளஸ் 1 மாணவி.. சிக்கியது எப்படி?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் 11ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமி ஒருவர் தனக்கு 4 நாள் தொடர்ந்து விடுமுறை வேண்டும் என்பதற்காக அம்மாவின் செல்போனில் இருந்து பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் இ-மெயில் அனுப்பிய சம்பவம் நடந்துள்ளது.

டெல்லியின் லோதி ரோட்டில் ஏர் போர்ஸ் பால பாரதி பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கு கடந்த 23ம் தேதி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

bomb threat

பள்ளியின் இ-மெயில் முகவரிக்கு வந்த இ-மெயிலில், ''உங்களின் கட்டடத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளது'' என்று கூறப்பட்டு இருந்தது.

இதுபற்றி அறிந்த ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக போலீஸ், வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து பள்ளியில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். ஒவ்வொரு வகுப்பறை உள்பட பள்ளியில் உள்ள அனைத்து இடங்களிலும் சோதனை செய்தனர்.

அப்போது பள்ளியில் வெடிகுண்டு எதுவும் இல்லாதததும், இ-மெயிலில் வந்த மிரட்டல் வெறும் புரளி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மிரட்டல் வந்த இ-மெயில் முகவரியை வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தான் அதிர்ச்சி காத்திருந்தது.

அது என்னவென்றால் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது அந்த பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் 16 வயது மாணவி என்பது தெரியவந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கடந்த 23ம் தேதி தனக்கு பள்ளிக்கு வர விருப்பமில்லை.

அதோடு சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை வால்மிகி ஜெயந்தி விடுமுறையாகும். இதனால் வெள்ளிக்கிழமையும் லீவு என்றால் 4 நாள் விடுமுறையில் இருக்கலாம் என்று நினைத்தார். இதனால் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால் விடுமுறை கிடைக்கும் என்று இ-மெயில் அனுப்பியதாக தெரிவித்தார்.

இதற்காக அவர் தனது அம்மாவின் செல்போன் பயன்படுத்தினார். போலீசார் அவரது அம்மாவின் செல்போன் என்பதை கண்டறிந்து மாணவி தான் மிரட்டல் விடுத்தார் என்பதை கண்டுபிடித்தனர். மாணவி மீது அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக போலீசார் தயாராகி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+