நாளுக்கு நாள் சரியும் கொரோனா பாதிப்பு, இன்று 11499 பேருக்கு உறுதி.. சற்றே பீதி கிளப்பும் பலி எண்ணிக்கை
டெல்லி : இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,499 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ள நிலையில், நேற்றைய பாதிப்பை விட 12.6 சதவீதம் குறைவாகும். தடுப்பூசி எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பாதிப்பும் வெகுவாக குறைந்து வருகிறது.
2019ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் 2020ஆம் ஆண்டில் இந்தியாவில் பரவத் தொடங்கியது. இதன் காரணமாக 7 மாதங்களுக்கு மேலாக பாதிப்பு இருந்தது. இந்த வருடம் மூன்றாவது அலை பாதிப்பு உறுதி செய்யப்பட்ட போதும் கடந்த ஆண்டைவிட உயிரிழப்புகள் சற்று குறைவாகவே இருந்தது.
டெல்டா, டெல்டா ப்ளஸ் , ஆல்பா என அடுத்தடுத்து புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தென் ஆப்பிரிக்காவில் ஓமிக்ரான் என்ற உருமாறிய புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டது.

கொரோனா 3வது அலை
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,499 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ள நிலையில், நேற்றைய பாதிப்பை விட 12.6 சதவீதம் குறைவாகும். நேற்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை விட சுமார் ஆயிரம் குறைவாகும். அதே நேரத்தில் நாட்டின் மொத்த பாதிப்பு eண்ணிக்கை, 4,29,05,844ஆக உயர்ந்து உள்ளது.

பலி எண்ணிக்கை
கொரோனா காரணமாக ஒரே நாளில் 23,958 பேர் குணமடைந்து உள்ளதாகவும், இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கையானது 4,22,70,482 ஆக உயர்வடைந்து உள்ளதாக மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் கொரோனாவுக்கு 255 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், இதனால் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,13,481ஆக உயர்ந்து உள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

தடுப்பூசி எண்ணிக்கை
1,77,10,17,151 டோஸ் தடுப்பூசி இதுவரை செலுத்தப்பட்டுள்ளதாகவும், 96,51,52,873 என்ற எண்ணிக்கையில் முதல் டோஸ் தடுப்பூசியும், 78,71,60,992 என்ற எண்ணிக்கையில் 2வது டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. மேலும் 1,87,03,286 பூஸ்டர் அதாவது முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளதாக கோவின் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் குறிப்பிட்ட சதவீதம் பேர் இன்னும் முதல் டோஸ் தடுப்பு ஊசி போட்டுக் கொள்ளாத நிலையில் அந்த எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது மேலும் இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசியை பொதுமக்கள் போட்டுக் கொள்ள முன்வர வேண்டும் எனவும் சுகாதார துறை அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

நிபுணர்கள் கருத்து
தடுப்பூசி எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வந்தாலும் பொதுமக்கள் முகக்கவசம் அணியாமலும், சமுக இடைவெளியை கடைபிடிக்காமலும் இருப்பதால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்றே அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பிப்ரவரி மாதம் கொரோனா மூன்றாவது அலை நிறைவடையும் வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் கணித்துள்ள நிலையில் , பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications