ஒரு வார்த்தை பேச ஒரு வாரம் காத்திருந்தேன்.. மௌனம் சாதிக்கும் ப.சிதம்பரம்.. கடும் குழப்பத்தில் சிபிஐ
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக சிபிஐ கேட்கும் எந்த கேள்விக்கும் ப. சிதம்பரம் சரியாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
Recommended Video
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக சிபிஐ கேட்கும் எந்த கேள்விக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சரியாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனமானது இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோருக்கு சொந்தமானதாகும். இது மும்பையை சேர்ந்த நிறுவனம். 2007ம் ஆண்டு, மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு இந்த நிறுவனத்திற்கு வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாகத்தான் தற்போது சிபிஐ சிதம்பரத்தை கைது செய்துள்ளது. கடந்த 5 நாட்களுக்கு முன் சிபிஐ அவரை கைது செய்தது.

ஏன் எதிர்ப்பு
முதலில் சிபிஐ காவலுக்கு எதிராக ப. சிதம்பரம் தரப்பு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. ஆனால் ப. சிதம்பரத்திற்கு சிபிஐ நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. அதனால் அவர் ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டார். அவரின் காவல் இன்றோடு முடிகிறது.

இல்லை
இந்த ஐந்து நாட்களில் ப. சிதம்பரத்திடம் தினமும் 6-7 மணி நேரம் சிபிஐ விசாரணை நடத்தி இருக்கிறது. இந்திராணி முகர்ஜி நிறுவனத்திற்கு அந்நிய முதலீடு அனுமதி வழங்கப்பட்டது எப்படி. இதில் உங்கள் பங்கு என்ன என்று தொடர்ந்து கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள். அதேபோல் கார்த்தி சிதம்பரம் குறித்தும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

ஆனால் இல்லை
ஆனால் ப. சிதம்பரம் எந்த கேள்விக்கும் பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. சிபிஐ கேட்கும் கேள்விக்கு எல்லாம் பெரும்பாலும் அவர் மௌனமாக இருந்தார் என்று கூறுகிறார்கள். ஒரு சில கேள்விக்கு மட்டும், வெறும் ஒரே வார்த்தையில் பதில் சொன்னார். அதிலும் முக்கியமான விஷயம் எதையும் அவர் சொல்லவில்லை என்கிறார்கள். இது சிபிஐ தரப்பை குழப்பத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

திட்டம் என்ன
இதனால் சிபிஐ தொடர்ந்து அவரின் காவலை நீட்டிக்கும்படி கோரிக்கை வைக்க உள்ளது. ப. சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. அவருக்கு பெயில் அளித்தால் சுத்தமாக விசாரணைக்கு ஒத்துழைக்க மாட்டார், அதனால் அவருக்கு காவலை நீட்டிக்க வேண்டும் என்று சிபிஐ இன்று உச்ச நீதிமன்றத்தில் வாதிட உள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications