லோக்சபா சபை குறிப்புகளில் என் பேச்சை நீக்கிவிட்டால் உண்மை மாறிவிடுமா? ராகுல் காந்தி சுளீர் கேள்வி
டெல்லி: லோக்சபா சபைக் குறிப்புகளில் இருந்து தமது பேச்சை நீக்கிவிட்டால் உண்மை என்பது மாறிவிடுமா? என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர் மோடியின் அரசு என்னுடைய பேச்சு முழுவதையும் கூட சபைக் குறிப்பில் இருந்து நீக்கிவிடலாம்.. எங்களுக்கு கவலை இல்லை என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.
லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று பேசினார். ராகுல் காந்தியின் கடுமையான விமர்சனங்களுக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உடனுக்குடன் பதில் கொடுத்தனர். இதனால் லோக்சபாவில் 10 ஆண்டுகளுக்கு பின்னர் காரசார விவாதம் நடந்தது.

லோக்சபாவில் பேசிய ராகுல் காந்தி, பாஜகவோ பிரதமர் மோடியோ இந்துக்களின் ஏகப் பிரதிநிதிகள் அல்ல. இந்துக்கள் என தங்களை அழைத்துக் கொள்கிற பாஜகவினர் வன்முறையில் ஈடுபடுகின்றனர். எப்போதுமே வெறுப்புணர்வை விதைக்கின்றனர். பொய்களைப் பரப்புகின்றனர் எனவும் காட்டமாக பேசினார். இதற்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் லோக்சபாவில் ராகுல் காந்தி பேசிய சில பகுதிகள், சபைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. ஆர்.எஸ்.எஸ். இயக்கம், அதானி மற்றும் அக்னிபாத் திட்டம் குறித்து ராகுல் காந்தி முன்வைத்த விமர்சனங்கள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. லோக்சபாவிலும் இன்று ராகுல் காந்தியின் பேச்சுகளை நீக்கியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சபைக் குறிப்புகளில் இருந்து என்னுடைய பேச்சை நீக்கிவிட்டால் உண்மை இல்லை என்றாகிவிடுமா? மோடி அரசு என்னுடைய பேச்சு முழுவதையுமே கூட சபைக் குறிப்பில் இருந்து நீக்கலாம். நாங்கள் கவலைப்படவில்லை. மோடியின் உலகத்தில் உண்மைகள் நீக்கப்படத்தான் செய்யும். நான் பேசியது உண்மைதான் என்றார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications