தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு 34 தொகுதிகளில் வெற்றி.. டைம்ஸ் நவ் கருத்து கணிப்பு
Recommended Video

டெல்லி:லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் 34 தொகுதிகளை திமுக தலைமையிலான கூட்டணி வெல்லும் என்று டைம்ஸ் நவ் கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி உள்ளன.
தமிழகத்தில் திமுக தலைமையில் ஒரு அணியும், அதிமுக தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகின்றன. டிடிவி தினகரனின் அமமுக, கமலின் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளும் தேர்தல் களத்தில் உள்ளன.

கருத்து கணிப்பு முடிவுகள்
இந்நிலையில்.. நாடு முழுவதும் தேர்தலில் மக்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்று டைம்ஸ் நவ் தொலைக்காட்சியும், விஎம்ஆர் என்ற நிறுவனமும் கருத்து கணிப்புகளை நடத்தின. அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளன.

283 தொகுதிகளில் வெற்றி
மத்தியில் பாஜக தலைமையிலான கூட்டணி 283 தொகுதிகளை வென்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று அந்த கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்து உள்ளன. காங்கிரஸ் கூட்டணிக்கு 135 தொகுதிகளே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

பாஜக படுதோல்வி
மற்ற மாநிலங்களில் பாஜக கூட்டணி வென்றாலும் தமிழகத்தில் அந்த கூட்டணி படுதோல்வி அடையும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 39 தொகுதிளில் திமுக கூட்டணிக்கு 34 தொகுதிகள் கிடைக்கும் என்றும், அதிமுக கூட்டணிக்கு வெறும் 5 இடங்களே கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கு சதவீதத்தில் முன்னிலை
வாக்குசதவீதம் அடிப்படையிலும் திமுக கூட்டணியே முன்னிலையில் உள்ளது. மொத்தமுள்ள வாக்குகளில் 52.20 சதவீதம் வாக்குகள் திமுக கூட்டணிக்கு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணிக்கு 37.20 சதவீதம் வாக்குகள் கிடைக்கும் என்று அந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற கட்சிகள் 10.06 சதவீதம் வாக்குகள் பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications