வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யக் கால அவகாசம் நீட்டிப்பு! - மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி: வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள், மார்ச் 15 வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக மத்திய அரசு 2020-21 நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கை டிச. 31, 2021க்கு தாக்கல் செய்ய வேண்டும் என அறிவித்திருந்தது. இந்தச் சூழலில் இப்போது கடைசி தேதி மார்ச் 15 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கொரோனா பரவல் காரணமாகப் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இதைக் கருத்தில் கொண்டும் ஆன்லைன் மூலம் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதில் உள்ள சிரமங்களைக் கருத்தில் கொண்டும், கடைசி நாள் மார்ச் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல 2021-22 ஆண்டிற்கான Income Tax Return தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியும் மார்ச் 15, 2022 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரி தவிர, வேறு சில கணக்கு தணிக்கைகளைத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியும் பிப்ரவரி 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மேலும் நீட்டிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று கடந்த டிசம்பர் 31இல் வருவாய் செயலாளர் தருண் பஜாஜ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications