கோமியத்துக்கு 50% கூட ஜிஎஸ்டி போடுங்க.. பால், தயிருக்கு ஏன்? -லோக்சபாவில் திமுக எம்பி செந்தில்குமார்
டெல்லி: கோமியத்துக்கான ஜிஎஸ்டியை 50% கூட உயர்த்திக்கொள்ளுமாறும் குழந்தைகள், பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பால், தயிருக்கான ஜிஎஸ்டியை குறைக்குமாறும் லோக்சபாவில் திமுக எம்.பி. செந்தில்குமார் வலியுறுத்தினார்.
கடந்த வாரம் தொடங்கிய மழைக்கால கூட்டத் தொடரில் ஆரம்பத்திலிருந்தே ஒவ்வொரு நாளும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக நாடாளுமன்ற லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் தொடர்ந்து அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு வந்தன.

எம்பிக்கள் சஸ்பெண்ட்
பண வீக்கம், பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கவும் மத்திய அரசின் விசாரணை அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவற்றை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதன் காரணமாக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

விலைவாசி உயர்வு
இந்த நிலையில் இன்று லோக்சபாவில் இன்று விலைவாசி உயர்வு தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதில் திமுக, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பிக்கள் மத்திய அரசையும், அதன் பொருளாதார கொள்கைகளையும், ஜி.எஸ்.டி. வரி உயர்வையும் கடுமையாக விமர்சித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

பால், தயிருக்கு ஜிஎஸ்டி
இந்த கூட்டத்தில் பேசிய தருமபுரி தொகுதி திமுக எம்.பி. செந்தில்குமார், ஜி.எஸ்.டி. வரி உயர்வை கடுமையாக விமர்சித்தார். "நரேந்திர மோடி அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே ஆதரவாக இருக்கிறது. பால், தயிர், உருளைக் கிழங்குகளின் விலையை உயர்த்தப்பட்டு வருகிறது. பேக்கேஜிங் செய்யப்பட்ட பாலுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது. பேக்கேஜிங் செய்யப்படாத பாலுக்கு ஜிஎஸ்டி வரி இல்லை என்கிறார்கள்.

கோமியம்
குழந்தைகள், பொதுமக்கள் பேக்கேஜிங் செய்யப்பட்ட பால் மற்றும் தயிரையே வாங்க விரும்புவார்கள். ஏனென்றால் அதுவே பாதுகாப்பானது. மத்திய அரசு வேண்டுமால் ஒரு பொருளுக்கு 50% கூட ஜிஎஸ்டி வரியை உயர்த்திக்கொள்ளட்டும். அதுதான் கோமியம். ஏன் சாதாரண மக்களை ஏன் கஷ்டப்படுத்த வேண்டும். தேர்தல் வந்தால் பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலை உயர்வதில்லை. தேர்தல் முடிந்தால் மீண்டும் உயர்கிறது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications