Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்னது மாத்த போறீங்களா? ‘சட்டத்தை’ கையிலெடுத்த ராகுல் காந்தி! இப்போ சேல்ஸ் பிச்சுகிட்டு போகுதாமே!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த போதிலும் இந்தியா கூட்டணி எதிர்பார்க்காததை விட அதிக தொகுதிகளை கைப்பற்றியது. குறிப்பாக ராகுல் காந்தியின் அரசியல் சாசனம் குறித்த பேச்சும் அந்த புத்தகத்தை அவர் கையில் எடுத்து காட்டிய நிலையில் தற்போது பாக்கெட் சைஸ் அரசியல் சாசன புத்தகத்தின் விற்பனை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

18-வது மக்களவைக்கான 543 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ம் தொடங்கி ஜூன் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற்றது. ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் பாஜக கூட்டணி ஆட்சியைப் பிடித்தது.

Rahul Gandhi Congress Constitution Delhi

ஆனால் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் 300க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி பாஜக கூட்டணி தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என கூறப்பட்டது. ஆனால் பாஜகவால் 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.

தற்போது ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ்குமார் தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு மற்றும் சில கட்சிகளின் எம்பிக்கள் ஆதரவோடு பாஜக ஆட்சியைப் படித்துள்ளது. பாஜகவை பொறுத்தவரை பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோர் இந்தியா முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். இந்தியா கூட்டணி சார்பில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.

பிரதமர் நரேந்திர மோடி அயோத்தி ராமர் கோவில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு சொத்து விவகாரம் உள்ளிட்டவற்றை குறி வைத்து பிரச்சாரம் மேற்கொண்டார். மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா, ஒரிசாவில் நவீன் பட்நாயக் மற்றும் அவரது உதவியாளரான தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி விகே பாண்டியன் ஆகியோரை குறி வைத்து பிரசாரம் மேற்கொண்டார்.

ஆனால் இந்தியா கூட்டணி சார்பில் இந்தியா முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி தனித்தே செயல்பட்டார் என்றே கூறலாம். அவரது பிரசாரமும் மக்களை சந்திக்கும் விதமும் இந்தியா முழுவதும் பேசு பொருளாகியது சகஜமாக சாலையில் நடமாடுவது, முடி திருத்தம் செய்வது இனிப்பு கடைகளில் ஸ்வீட் வாங்குவது என மக்களோடு மக்களாக பழகிய ராகுல் காந்தியின் பிரசார யுக்தி அவரை பொதுமக்களிடம் வெகுவாக கொண்டு சேர்த்தது.

குறிப்பாக பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனத்தை மாற்றி விடுவார் என பாக்கெட் சைஸ் அரசியல் சாசன புத்தகத்தை வைத்து அவர் பேசியது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பிரசாரத்தின் போது மட்டுமல்லாமல் செய்தியாளர்களின் சந்திப்பிலும் ராகுல் காந்தி மினி சைஸ் அரசியல் சாசன புத்தகத்தை கையில் வைத்தவாறு பேசினார். இது இந்தியா முழுவதும் ராகுல் காந்தியையும் அரசியல் சாசன புத்தகத்தின் பாக்கெட் சைஸ் மாதிரியையும் கொண்டு சென்றது.

தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பதவி ஏற்ற போது அரசியல் சாசன புத்தகத்தை பிரதமர் நரேந்திர மோடி தொட்டு வணங்கினார். எந்த அரசியல் சாசனத்தை மாற்றுவேன் என பிரதமர் மோடி பேசினாரோ அதே அரசியல் சாசன புத்தகத்தை தற்போது தொட்டு வணங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார் என சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் பறந்ததும் உங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்த நிலையில் ராகுல் காந்தி கையில் உயர்த்திப்பிடித்த மினி சைஸ் அரசியல் அமைப்பு சட்ட புத்தகம் உத்திர பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த ஈஸ்டர்ன் புக்ஸ் என்ற பதிப்பகம் வெளியிட்ட புத்தகம் என்ற தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. ராகுல் காந்தியின் பிரச்சாரத்தை அடுத்து அந்த புத்தகத்தின் விற்பனையானது அதிகரித்திருப்பதாக கூறுகின்றனர் அந்த பதிப்பகத்தினர். அதாவது கடந்த ஆறு மாதங்களில் மட்டும் அந்த புத்தகத்தின் பத்தாவது பதிப்பு 5000 பிரதிகளை கடந்து விற்பனையாகி இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் ஒரு பதிப்புக்கே 500 புத்தகங்கள் விற்றாலே பெரிய விஷயம் என்ற நிலையில் ராகுல் காந்தியின் பிரச்சாரத்திற்கு பிறகு அந்த புத்தகத்தின் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளதாக கூறுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+