தேசமே கொண்டாடும் சுதந்திர தினம் 2023.. நண்பர்களுக்கு அனுப்ப வாழ்த்து செய்திகள், வாட்ஸ்அப் ஸ்டேடஸ்கள்
டெல்லி: நாடு முழுக்க நாளை 77ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு நண்பர்களுக்கு அனுப்ப வாழ்த்து செய்தி, தலைவர்களின் கருத்துகளை நாம் பார்க்கலாம்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் மிகுந்த உற்சாகத்துடன் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் அடைந்ததை நினைவுகூரும் இந்த நாள் ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் இது ஒரு பெருமையான நாளாகும்.

சுதந்திரம்: சுதந்திர தினத்தன்று நாட்டின் விடுதலைக்காக நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களையும் நாம் நினைவு கூருவோம். 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி நள்ளிரவில் ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றது.
இந்தியா 200 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தது.. இந்தியாவில் சுதந்திரத்திற்கு பல்வேறு தலைவர்களும் போராடினர். அகிம்சை வழியிலும், ஆயுதம் ஏந்தியும் பலரும் போராட்டங்களை முன்னெடுத்தனர். பல ஆண்டுகளாக இந்த போராட்டம் தொடர்ந்தது. ஒரு வழியாக இந்தியா 1947ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றது.
தியாகங்கள்: இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் நமது முன்னோர்களின் எண்ணற்ற தியாகங்களைக் காட்டுவதாக இருக்கிறது. முன்னோர்களின் தியாகத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தன்று நாடு முழுவதும் நாட்டின் மூவர்ணக் கொடி ஏற்றப்படும்.. நாடே இந்த நாளை கோலாகலமாகக் கொண்டாடும்.
சுதந்திர தினத்தன்று நண்பர்களுக்கு வாழ்த்து சொல்லவும்.. வாட்ஸ்அப்-இல் ஸ்டேடஸ் வைக்கத் தலைவர்களின் பேச்சுகளைப் பலரும் இணையத்தில் தேடுவார்கள். இதற்கிடையே இந்த சுதந்திர தினத்திற்கு வாழ்த்து சொல்லவும் ஸ்டேடஸ் வைக்கவும் நாம் மெசஜ்களை நாம் இங்கே பார்க்கலாம்.

இந்நாளில், நமது துணிச்சலான மாவீரர்களை நினைவு கூர்வோம்... அவர்கள் போராடிப் பெற்றுத் தந்த சுதந்திரத்தைக் கொண்டாடுவோம்.
- நமது நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் துணிச்சலான வீரர்களுக்குத் தலைவணங்குவோம்.
- நாம் சுதந்திரமாக இருக்க எல்லையில் பாடுபடும் ராணுவ வீரர்களை நினைவு கூர்வோம்
- சுதந்திரத்தைக் கொண்டாடுவோம்.. நாட்டை வல்லரசாக்குவோம்.
- தேசமாக ஒன்றிணைவோம்!
- பட்டொளி வீசட்டும்!
- எல்லையில் இருக்கும் ராணுவ வீரர்களை நினைவுகூர்வோம்
- விடுதலை போராட்ட வீரர்களின் தியாகத்தை நினைவு கூர்வோம்.
- எல்லையில் நின்று நாட்டை காக்கும் வீரர்களுக்கு நன்றி
- ஜெய் ஹிந்த்!
- வந்தே மாதரம்!
- இந்தியனாக பெருமை கொள்வோம்!
- இந்தியனாக ஒன்றிணைவோம்!
- நாட்டின் சுதந்திரத்தை நாம் தலைவணங்குவோம்!
- ஜனநாயகத்தின் இதயமே சுதந்திரம் தான். அதைப் போராடிப் பெற்றுத் தந்த வீரர்களுக்கு நன்றி!
- இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!
அதேபோல இந்தியாவின் சுதந்திரம் குறித்து நாட்டின் முக்கிய தலைவர்கள் சிலர் சொல்லிய கருத்துகளை நாம் பார்க்கலாம்..
- "நள்ளிரவு நேரத்தில், உலகம் தூங்கும் போது, இந்தியா சுதந்திர காற்றை சுவாசிக்கிறது- முன்னாள் பிரதமர் நேரு
- "ஒரு நபரை கொல்வது எளிது.. ஆனால் சிந்தனைகளையும் கொள்கைகளையும் யாராலும் கொல்ல முடியாது. பெரிய சாம்ராஜ்யங்களே சரிந்த போதிலும், கொள்கைகள் அழியவில்லை" - போராளி பகத் சிங்.
- "சமூகம் சுதந்திரத்தை அடையாத வரை, சட்டம் வழங்கும் சுதந்திரத்தால் உங்களுக்கு எந்த பயனும் இல்லை." - பி.ஆர்.அம்பேத்கர்.
- "சுயராஜ்ஜியம் என் பிறப்புரிமை.." - பாலகங்காதர திலகர்
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications