இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2487 பேருக்கு கொரோனா தொற்று.. மொத்தம் 40,263 ஆக உயர்வு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் 24 மணி நேரத்தில் மட்டும் 2487 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் இன்று மாலை நிலவரப்படி 40263 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிவேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் பெருநகரங்களான மும்பை, அகமாதாபாத், டெல்லி, சென்னை, ஹைதராபாத், புனே உள்பட பெருநகரங்களில் தான் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக உள்ளது.

india: 2487 new COVID19 positive cases, 83 deaths reported in the last 24 hours

நாடு முழுவதும் மே3ம் தேதி மாலை நிலவரப்படி 40,263 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில மட்டும் 2,487 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் 28,070 பேர் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் நாடு முழுவதும் 10886 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் 83 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 1,306 பேர் இதுவரை கொரோனாவால் இந்தியாவில் உயிரிழந்துள்ளனர்.

நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 12,296 பேரும், அடுத்தபடியாக குஜராத்தில் 5,428 பேரும், டெல்லியில் 4122 பேரும் தமிழகத்தில் 3023 பேரும், 2,837 பேரும், ராஜஸ்தானில் 2,832 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் 2,626 பேரும், ஆந்திராவில் 1,583 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் உள்ள தனிப்பட்ட நகரங்களில் என்று பார்த்தால் 8,359 பேர் மும்பையில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக டெல்லியில் 4122 பேர், அகமதாபாத்தில் 3,817 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தூரில் (மத்திய பிரதேசம் ) 1528 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 1458 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+