என்னது காங்கிரஸ் கூட்டணி இவ்வளவு தொகுதிகளை அள்ளுமா.. உளவுத்துறை அறிக்கையாம்.. உலவும் உடான்ஸ்!
டெல்லி: வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு தங்கள் கூட்டணிக்கு 'இந்தியா' என பெயர் வைத்துள்ள நிலையில், தற்போதைய சூழலில், தேர்தல் நடந்தால் யாருக்கு எத்தனை தொகுதியில் வெற்றி வாய்ப்பு என்று உளவுத்துறை கொடுத்ததாக ஒரு ரிப்போர்ட் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
நாடாளுமன்ற தேர்தல் வரும் 2024 ஆம் ஆண்டும் ஏப்ரல் மே மாதங்களில் நடைபெறும் எனத் தெரிகிறது. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், தற்போது தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருக்கும் பாஜகவை எப்படியாவது வீழ்த்தி விட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளன. எதிர்க்கட்சிகள் பிரிந்து கிடந்தால் பாஜகவிற்கே சாதகமாக மாறும் இதனால் மோடி மீண்டும் வெற்றி பெற்று விடுவார் எனக் கருதிய எதிர்க்கட்சிகள் ஒரணியில் திரண்டு ஒருங்கிணைந்து போட்டியிட திட்டமிட்டுள்ளன.

எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் இந்த முயற்சியில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் முழு வீச்சில் ஈடுபட்டார். பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த மாதம் எதிர்க்கட்சிகளின் முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 26 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு I.N.D.I.A என பெயரிடப்பட்டுள்ளது.
மாநில அளவில் வலுவாக உள்ள கட்சிகள் ஒருங்கிணைந்து போட்டியிடுவதாக அறிவித்து இருப்பதால் பாஜகவின் என்.டி.ஏ கூட்டணிக்கு கடும் சவாலை இந்தக் கூட்டணி அளிக்கும் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக இருக்கும் திமுக, மேற்கு வங்காளத்தில் ஆட்சி செய்யும் மம்தா பானர்ஜியின் திரினாமூல் காங்கிரஸ், பீகாரில் ஆளும் நிதிஷ்குமாரின் கூட்டணி கட்சிகள், டெல்லி மற்றும் பஞ்சாபி ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள், இடது சாரிகள் ஒருங்கிணைந்து இருப்பதால என்.டி.ஏ கூட்டணிக்கு அக்கினி பரிட்சையாகத்தான் வரும் நாடாளுமன்ற தேர்தல் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.
இப்போதைய நிலையில் தேர்தல் நடந்தால் யாருக்கு எத்தனை தொகுதி வெற்றி வாய்ப்பு என்று உளவுத்துறை கொடுத்த Report..... pic.twitter.com/YiwkUc3SsW
— 🖤♥️ Madhavi Sri 🖤♥️ (@Srimukhi_02offl) July 20, 2023
இந்த நிலையில், எந்தெந்த மாநிலங்களில் எந்தக் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்பது பற்றி உளவுத்துறை அறிக்கை சமர்ப்பித்து இருப்பதாக சமூக வலைத்தளங்களில் ஒரு லிஸ்ட் பரவி வருகிறது. அந்த பட்டியலின் படி, தமிழ்நாட்டில் "இந்தியா" கூட்டணி மொத்தம் உள்ள 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. என்.டி.ஏ கூட்டணிக்கு ஒரு இடம் கூட தேறாது என கூறப்பட்டுள்ளது.
புதுவையிலும் இந்தியா கூட்டணியே வெல்லும் எனவும், கர்நாடகாவில் 22 தொகுதிகளில் இந்தியா கூட்டணியும் 6 இடங்களில் என்.டி.ஏ கூட்டணியும் வெற்றி பெறும் என்றும், கேரளாவில் 20 இடங்களிலும் இந்தியா கூட்டணியே வெற்றி பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல், ஆந்திராவில் 15 இடங்களில் இந்தியா கூட்டணியும் 2 இடங்களிலும் என்.டி.ஏ கூட்டணியும் பிற கட்சிகள் 8 இடங்களிலும் வெல்லும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் இந்தியா கூட்டணி 9 இடங்களிலும் என்.டி.ஏ கூட்டணி ஒரு இடத்திலும் பிற கட்சிகள் 7 இடத்திலும் வெற்றி பெறுமாம். பாஜக ஆட்சி நடைபெற்று வரும் உத்தர பிரதேசத்தில் என்.டி.ஏ கூட்டணி 50 மக்களவை தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி 30 இடங்களிலும் வெற்றி பெறுமாம். மகாராஷ்டிர மாநிலத்தில் இந்தியா: 30, என்.டி.ஏ: 18, மேற்கு வங்காளத்தில் இந்தியா: 37, என்.டி.ஏ: 7, இடங்களிலும் வெற்றி பெறுமாம்.
பாஜக தொடர்ந்து ஆட்சியில் உள்ள குஜராத்தில் என்.டி.ஏ 20 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி 6 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் வன்முறையால் கொதித்துக் கொண்டு இருக்கும் மணிப்பூரில் உள்ள 2 இடங்களிலுமே இந்தியா கூட்டணி வெற்றி பெறும் எனவும் உளவுத்துறை அறிக்கை என்ற பெயரில் வெளியாகியுள்ள பட்டியலில் உள்ளது. மத்திய பிரதேசத்தில் இந்தியா கூட்டணி 18 தொகுதியிலும், என்.டி.ஏ கூட்டணி 11 தொகுதியிலும் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் 7 இடங்களிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் எனவும் பீகாரில் 35 இடங்களில் இந்தியா கூட்டணியும் 5 இடங்களில் என்.டி.ஏ கூட்டணியும் வெற்றி பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் ராஜஸ்தானில் 15 தொகுதிகளில் இந்தியா கூட்டணியும் 10 தொகுதிகளில் என்.டி.ஏ கூட்டணியும் வெற்றி பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. மொத்தத்தில் இந்தியா கூட்டணி 357 தொகுதிகளில் வென்று ஆட்சியை கைப்பற்றும் எனக் கூறப்பட்டுள்ளது.
பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 155 இடங்களில் மட்டுமே வென்று ஆட்சியை பறிகொடுக்கும் எனவும் பிற கட்சிகள் அதாவது இரண்டு கூட்டணியிலுமே அங்கம் வகிக்காத கட்சிகள் 31 இடங்களில் வெல்லும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதமருக்கு மத்திய உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட் என இந்த ரிப்போர்ட் வைரலாகிறது. ஆனால் இது எதிர்க்கட்சிகள் ரெடி செய்து சுற்றலில் விட்டுள்ள அறிக்கையாகும். இதில் உண்மையில்லை என்கிறது பாஜக வட்டாரம்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications