தென்னிந்தியாவில் அடித்து நொறுக்கும் "இந்தியா.." பாஜக கூட்டணி ரொம்ப மோசம்! பரபர லோக்சபா தேர்தல் சர்வே
டெல்லி: விரைவில் லோக் சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தென்னிந்தியாவில் எந்தக் கட்சி எத்தனை இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளது என்பது குறித்து லோக் போல் அமைப்பு சர்வே ஒன்றை வெளியிட்டுள்ளது.
இன்னும் சில மாதங்களில் இந்தியாவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளன. ஏற்கனவே இந்தத் தேர்தலுக்காக பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்கள் பணிகளை ஆரம்பித்துவிட்டன.

இதற்கிடையே தென்னிந்தியாவில் லோக்சபா தேர்தல் நடந்தால் எந்த மாநிலங்களில் எந்தக் கட்சி வெல்ல வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து லோக் போல் அமைப்பு இப்போது புதிய சர்வே ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஆந்திரா: அதன்படி ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்குச் சாதகமான ஒரு சூழலே நிலவுகிறது. அங்கே மொத்தம் 25 லோக்சபா சீட்கள் இருக்கும் நிலையில், அங்கே ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 13-15 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதேபோல தெலுங்கு தேசம் கட்சி 6-8 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒரு இடத்திலும், இந்தியா கூட்டணி ஒரு இடத்திலும் வெல்ல வாய்ப்புள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
மற்றொரு தெலுங்கு பேசும் மாநிலமான தெலுங்கானாவில் மொத்தம் 17 தொகுதிகள் இருக்கும் நிலையில், அங்கே காங்கிரஸ் கட்சிக்கு 8-10 இடங்களும் பிஆர்எஸ் கட்சிக்கு 3-4 இடங்களும் கிடைக்கும் என்று லோக் போல் சர்வே கூறியுள்ளது. அதேபோல பாஜக அங்கே 1-2 தொகுதிகளில் வெல்லும் என்றும் மற்ற கட்சிகள் 0-1 இடங்களில் வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் "இந்தியா" தான்.. டாப்பில் திமுக.. 2ஆவது அதிமுக.. அப்போ பாஜக எங்கே? லோக்சபா தேர்தல் சர்வே
கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் பாஜக இடையே கடும் போட்டி இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மொத்தம் 28 லோக்சபா தொகுதிகள் உள்ள நிலையில், அங்கே காங்கிரஸ் 12-14 தொகுதிகளில் வெல்ல வாய்ப்புள்ளதாகவும் பாஜக 10-12 தொகுதிகளில் வெல்ல வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஜேடிஎஸ் கட்சி 1-2 இடங்களைக் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக லோக்போல் சர்வே கூறப்பட்டுள்ளது.
நமது அண்டை மாநிலமான கேரளாவில் மொத்தம் 20 தொகுதிகள் இருக்கும் நிலையில், அங்கே மொத்தமாக இந்தியா கூட்டணியே வெல்ல வாய்ப்புள்ளதாக லோக் போல் சர்வே கூறியுள்ளது. அங்குள்ள 20 தொகுதிகளில் இந்தியா கூட்டணி 18-20 தொகுதிகளில் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. பாஜக கூட்டணிக்கு 0-1 தொகுதிகளில் வெல்ல வாய்ப்புள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு: தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மொத்தமுள்ள 39 தொகுதிகளில் இந்தியா கூட்டணி 34-37 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதிமுக 1-3 இடங்களில் மட்டுமே வெல்லும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. அதேபோல பாஜக கூட்டணி 0-1 இடங்களிலும், மற்ற கட்சிகள் 0-1 இடங்களிலும் வெல்ல வாய்ப்புள்ளதாக லோக் போல் சர்வேயில் கூறப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களான புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவில் மொத்தம் 3 தொகுதிகள் உள்ளன. இந்த 3 தொகுதிகளில் இந்தியா கூட்டணி 1-2 இடங்களில் வெல்லும் என்றும் பாஜக கூட்டணி 0-1 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாகவும் லோக் போல் சர்வேயில் கூறப்பட்டுள்ளது.
யாருக்கு எத்தனை இடம்: ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது தென்னிந்திய மாநிலங்களில் மொத்தம் 132 இடங்கள் உள்ளன. இதில் இந்தியா கூட்டணிக்கு 83 இடங்கள் வரை கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதேநேரம் ஆளும் பாஜக கூட்டணிக்கு வெறும் 18 இடங்கள் மட்டும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மற்ற இடங்கள் இந்தப் பிராந்திய கட்சிகளுக்குச் செல்லும் என்று லோக் போல சர்வே தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications