உள்நாட்டு போர்.. பொருளாதார மந்த நிலை காரணமாக 'சென்சஸ்' எடுக்காத நாடுகள்! லிஸ்டில் இணைந்தது இந்தியா
டெல்லி: உள்நாட்டு போர், கிளர்ச்சி, பொருளாதார நெருக்கடிகள் உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்கொண்டிருக்கும் நாடுகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் தற்போது இணைந்திருக்கிறது.
இந்தியாவில் ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வந்தது. ஆனால், கடந்த 2011க்கு பிறகு இது நடைபெறவில்லை. கொரோனா காலகட்டம் என்பதால் 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், உலக அளவில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாத ஒரு சில நாடுகளில் இந்தியாவும் இணைந்திருக்கிறது. மொத்தமுள்ள 233 நாடுகளில் 81 சதவிகிதமான நாடுகளில் இந்த கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் போர், உள்நாட்டு கிளர்ச்சி உள்ளிட்ட பிரச்னையால் பாதிக்கப்பட்ட உக்ரைன், ஏமன், சிரியா, மியான்மர், தலிபான்களால் ஆளப்படும் ஆப்கானிஸ்தான், பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட இலங்கை போன்ற நாடுகளில்தான் இன்னும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இந்த வரிசையில் தற்போது இந்தியாவும் இணைந்திருக்கிறது.
அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இந்தியாவும், நைஜிரியாவும்தான் இன்னும் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி முடிக்கவில்லை. சீனா, அமெரிக்கா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகள் கடந்த 2020ல் இந்த கணக்கெடுப்பை நடத்தி முடித்தன. அதேபோல, அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் 5வது இடத்தில் உள்ள பாகிஸ்தான், கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த கணக்கெடுப்பை நடத்தி முடித்திருக்கிறது.
பிரிக்ஸ் நாடுகளின் பட்டியலை எடுதுக்கொண்டாலும், இந்தியாதான் இன்னும் இந்த கணக்கெடுப்பை நடத்தாமல் இருக்கிறது. பிரேசில் 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதமும், சீனா 2020ம் ஆண்டு நவம்பர் மாதமும், தென்னாப்பிரிக்கா 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதமும், ரஷ்யா 2021ம் ஆண்டு அக்டோபர் மாதமும் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி முடித்திருக்கிறது.
இந்தியாவின் பக்கத்து நாடுகளான நேபாளம், மாலத்தீவு, பூட்டான் மற்றும் வங்கதேசம் கூட சமீபத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி முடித்துவிட்டது.
இப்படியாக இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாமல் இருப்பதன் காரணமாக பல்வேறு மற்ற கணக்கெடுப்புகளும் நடைபெறாமல் இருக்கிறது. குறிப்பாக, பொருள் மற்றும் சேவைக்கான நுகர்வு கணக்கெடுப்பு, தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு உள்ளிட்ட பல முக்கியமான கணக்கெடுப்புகள் நடைபெறாமல் இருக்கிறது. எனவே உணவு பாதுகாப்பு சட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் 2011 கணக்கெடுப்பின்படியே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
பழங்குடியின குழந்தைகளின் கல்விக்காக ஏக்லவ்யா மாதிரி குடியிருப்புப் பள்ளிகளை மத்திய அரசு நடத்தி வருகிறது. இந்த பள்ளிகளுக்கான நிதி கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், 2024ல் பழங்குடி குழந்தைகளின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்திருக்கும். எனவே, ஒதுக்கப்படும் நிதி போதுமானதாக இருப்பதில்லை. இது ஒரு சிறு உதாரணம்தான். மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாததால் இப்படியெல்லாம் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.
இது தவிர மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாததால், மாநில அரசுகளால் எஸ்சி / எஸ்டி மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களுக்கு முறையாக நிதி ஒதுக்கீடு செய்ய இயலவில்லை. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாததால் மாநில அரசுகளால் இயற்றப்படும் சட்டங்களும் நடைமுறைப்படுத்த முடியாமல் இருக்கிறது. எனவே, சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்திட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
-
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா












Click it and Unblock the Notifications