இந்தியா vs பாகிஸ்தான்.. நாளுக்கு நாள் அதிகரிக்கும் பதற்றம்.. யாரிடம் எவ்வளவு அணு ஆயுதம் உள்ளது?
டெல்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையில் நாளுக்கு நாள் அறிவிக்கப்படாத போர் நடந்து வருகிறது. ஒவ்வொரு நாள் இரவிலும் பாகிஸ்தான் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை வழக்கமாக்கி வரும் சூழலில், இந்தியா முறையான பதிலடியை வழங்கி வருகிறது. இந்த நிலையில் இரு நாடுகளிடமும் இருக்கும் அணு ஆயுதம் குறித்த தகவல்களை பார்க்கலாம்.
இந்தியா - பாகிஸ்தான் இடையில் 4வது நாளாக போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் தரப்பில் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்திய படைகள் பாகிஸ்தானில் உள்ள விமானப் படை தளங்களை தாக்குதல் நடத்தியிருக்கின்றன. இதனால் 3 விமானப் படை தளங்கள் சேதமடைந்துள்ளன.

பாகிஸ்தானில் உள்ள நூர் கான் விமான தளம், முரித் விமான தளம் மற்றும் ரஃபிகி விமான தளம் தாக்கப்பட்டதாக பாகிஸ்தான் ஒப்புக் கொண்டுள்ளது. இதனிடையே இந்தியா - பாகிஸ்தான் இடையில் அணு ஆயுத போர் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், அவசரமாக அணு சக்தி கட்டளை அமைப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி, பாகிஸ்தான் படைகள் இந்திய எல்லைப் பகுதியை நெருங்கி வருவதாக கூறியுள்ளார். கடந்த சில நாட்களாக டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலமாக பாகிஸ்தான் நடத்திய தாக்குதலை, இந்தியா முன்னெச்சரிக்கையுடன் முறியடித்து வருகிறது. இந்த நிலையில் இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றம் அடுத்த கட்டத்தை எட்டி இருக்கிறது.
இந்த நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் உள்ள அணு ஆயுதங்கள் தொடர்பாக பிபிசி செய்தியின் அடிப்படையில், அணு ஆயுதங்களை பொறுத்தவரை ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஒரு அறிவுசார் குழுவான ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் 172 அணு ஆயுதங்களும், பாகிஸ்தானிடம் 170 அணு ஆயுதங்களும் இருக்கின்றன.
ஆனாலும் இரு நாடுகளும் எத்தனை அணு ஆயுதங்களை நிலை நிறுத்தியுள்ளன என்பது இதுவரை தெளிவாக இல்லை. முதல்முறையாக இந்தியா 1998ஆம் ஆண்டு ஆபரேஷன் சக்தி என்ற பெயரில் பொக்ரானில் 5 அணு ஆயுத சோதனைகளை இந்தியா நடத்தியது. அதேபோல் பாகிஸ்தானை பொறுத்தவரை 1998ஆம் ஆண்டு சாகை 1 என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தானில் 6 அணு ஆயுத சோதனைகளை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications