விவசாயிகள் போராட்டத்தை தூண்டுகிறதாம்.. 1178 டுவிட்டர் அக்கவுண்ட்களை முடக்க மத்திய அரசு பரிந்துரை
டெல்லி: விவசாயிகள் போராட்டம் தொடர்பாக, 1178 டுவிட்டர் அக்கவுண்டுகளை முடக்க மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இவை, பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தானுடன் தொடர்புள்ள அக்கவுண்டுகள் என அரசு குற்றம்சாட்டியுள்ளது. விவசாயிகள் போராட்டம் குறித்து தவறான தகவல்களை பரப்புவதாகவும் மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளதாக டுவிட்டர் நிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பிட்ட 1178 டுவிட்டர் கணக்குகளின் பட்டியலை அந்த நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுப்பியுள்ளது. இந்த கணக்குகள் பாகிஸ்தானில் இருந்து இயக்கப்பட்டு வருவதாகவும், தொடர்ந்து விவசாயிகளின் போராட்டங்கள் குறித்து தவறாக ட்வீட் செய்து வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த பட்டியல் பிப்ரவரி 4ம் தேதி ட்விட்டருக்கு அனுப்பப்பட்டுள்ளது. விவசாயிகள் ஆர்ப்பாட்டங்களை ட்வீட் செய்வதன் மூலம் பொது ஒழுங்கிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்த கணக்குகளில் பல தானியங்கி வகை போட்களாக இருக்கின்றன, அவை விவசாயிகளின் ஆர்ப்பாட்டங்களில் தவறான தகவல் மற்றும் கோபப்படுத்தும் விஷயங்களை ஷேர் செய்கின்றன.
ட்விட்டர் நிறுவனம் இந்த அக்கவுண்டுகளுக்கு எதிராக ஏதேனும் நடவடிக்கை எடுக்குமா என்பது இன்னும் தெளிவாகவில்லை. ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி இந்தியாவில் விவசாயிகளின் ஆர்ப்பாட்டங்களை தெளிவாக அறிந்திருக்கிறார், விவசாயிகளுக்கு ஆதரவாக ட்வீட் செய்த பாடகி ரிகானா ட்வீட்டுக்கு, அவர் லைக் கொடுத்திருந்தார்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications