சமோசா- கிச்சடி.... மோடி- ஆஸி. பிரதமர் ஸ்காட் மோரிசன் வீடியோ கான்ஃபரன்ஸில் சுவராசியம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசனுடனான பிரதமர் மோடியின் வீடியோ கான்ஃபரன்ஸில் சமோசா, கிச்சடி மற்றும் மோடியின் கட்டிபிடி அணுகுமுறை ஆகியவையும் இடம்பெற்றிருந்தது சுவாரசியமாக இருந்தது.

Recommended Video

    மோடியின் ராஜதந்திரம்... நிலைகுலைந்த சீனா

    ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசனின் இந்திய பயணம் காட்டுத் தீ, கொரோனா ஆகியவற்றால் தடைபட்டு வருகிறது. ஆனாலும் ஆஸ்திரேலியா பிரதமர் மோரிசனும் பிரதமர் மோடியும் சமூக வலைதளங்களில் பல்வேறு சுவாரசியங்களை பகிர்ந்து வருகின்றனர்.

    சமசோதா வித் மாங்காய் சட்னி

    சமசோதா வித் மாங்காய் சட்னி

    சில நாட்களுக்கு தமது ட்விட்டர் பக்கத்தில் ஆஸ்திரேலியா பிரதமர் மோரிசன், தாம் மோடிக்காக சமோசா வித் மாங்காய் சட்னி தயாரித்தேன். இந்த வாரம் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் மோடியுடன் பேசுகிறேன். அப்போது மோடியுடன் இதனை பகிர்ந்து கொள்வேன் என கூறியிருந்தார். இதற்கு பிரதமர் மோடியும் பதில் தந்தார்.

    இணைப்பு பாலம் சமோசா

    இணைப்பு பாலம் சமோசா

    அதில், இந்திய பெருங்கடல் பகுதியை இந்த சமோசா இணைக்கிறதே.. பார்க்கவே ரொம்ப ருசியாக உள்ளது மோரிசன். கொரோனாவுக்கு எதிரான போரில் வென்றதும் நாம் இருவரும் இணைந்து சமோசாவை ருசிப்போம். உங்களுடனான வீடியோ கான்ஃபரன்ஸிங்குக்காக வெயிட்டிங் என கூறியிருந்தார். இருநாட்டு பிரதமர்களின் ஈகோ இல்லாத இந்த சுவாரசிய பதிவுகள் நெட்டிசன்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

    வீடியோ கான்ஃபரன்ஸ் ஆலோசனை

    வீடியோ கான்ஃபரன்ஸ் ஆலோசனை

    இந்த நிலையில் இருநாட்டு தலைவர்களும் இன்று வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் பல்வேறு விவகாரங்கள் குறித்து உரையாடினர். இந்த உரையாடலிலும் சமோசாவும் இடம்பெற்றிருந்தது. அப்போது பேசிய மோரிசன், மோடியின் புகழ்பெற்ற ஆரத்தழுவலுக்காகவும் என்னுடைய சமோசாக்களை பகிர்ந்து கொள்ளவும் வருகிறேன். அடுத்த முறை குஜராத் கிச்சடி உங்களுக்கு தருகிறேன். உங்களை நேரில் சந்திப்பதற்கு முன்னர் குஜராத் கிச்சடியை தயாரிக்க பழகுகிறேன் என குறிப்பிட்டிருந்தார்.

    நாடு முழுவதுமே கிச்சடி

    நாடு முழுவதுமே கிச்சடி

    இதற்கு பதில் தந்த பிரதமர் மோடி, குஜராத் மாநில மக்கள் இதை கேட்டு மகிழ்ந்திருப்பார்கள். கிச்சடியை நாடு முழுவதும் உணவாக எடுத்துக் கொள்கின்றனர். இதற்கு ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பெயர் இருக்கலாம் எனவும் மோடி சுட்டிக்காட்டினார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+