அதிர்ந்த நாடாளுமன்றம்.. எதிர்க்கட்சிகள் 3வது நாளாக கடும் அமளி.. இரு சபைகளும் நாளைக்கு ஒத்திவைப்பு
டெல்லி: பீகார் சட்டசபை தேர்தலையொட்டி அங்கு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் முறையை காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இதுபற்றி விவாதிக்க கோரி இன்று 3வது நாளாக எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். முதலில் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட இருசபைகளும் அதன்பிறகு மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு மீண்டும் கூடியும் எதிர்க்கட்சிகள் விடாததால் இருசபைகளும் நாளை காலை 11 மணிக்கு வரை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் ஆகஸ்ட் 31ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் மழைக்கால கூட்டத்தொடரின் 2வது நாள் கூட்டம் நேற்று நடந்தது.

கூட்டம் தொடங்கியதுமே பீகார் சட்டசபை தேர்தலையொட்டி வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வது பற்றி விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் இருசபைகளிலும் கோரிக்கை வைத்தனர். ஆனால் அவர்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதையடுத்து அவர்கள் கூச்சல் போட்டு அமளியில் ஈடுபட்டதால் நேற்றைய கூட்டம் மாறி மாறி ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் தான் இன்று 3வது கூட்டம் காலை 11 மணிக்கு தொடங்கியது. லோக்சபாவில் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. லே விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு நோட்டீஸை வழங்கியிருந்தா். பீகார் சட்டசபை தேர்தலில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வது பற்றி விரிவாக விவாதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இது ஏற்கப்படவில்லை. மாறாக ரயில்வே துறை சார்ந்த கேள்வி - பதில் நேரம் தொடங்கியது. இதனால் கோபமான எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷமிட்டனர். இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. மேலும் சபையின் மையப்பகுதிக்கு சென்ற எதிர்க்கட்சி எம்பிக்கள் பீகார் சட்டசபை தேர்தல் வாக்கள் பட்டியல் திருத்தம் செய்ய எதிர்ப்பு தெரிவிக்கும் பதாகைகளை கையில் ஏந்தியிருந்தனர்.
#WATCH | Lok Sabha adjourned till 12 noon amid sloganeering by the Opposition MPs.
— ANI (@ANI) July 23, 2025
Speaker Om Birla says, "...This House is for discussion and dialogue, not for sloganeering. Maintain the decorum of the House..."
(Source: Sansad TV) pic.twitter.com/HpaUPGknGb
இது சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியது. மேலும் நேற்று , நேற்று முன்தினம் ஆகிய தினங்களை காட்டிலும் இன்று எதிர்க்கட்சி எம்பிக்கள் உரக்க கோஷமிட்டனர். இதையடுத்து லோக்சபா மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதே பிரச்சனை ராஜ்யசபாவிலும் எதிரொலித்த நிலையில் அந்த சபையையும் மதியம் 12 மணி வரை துணை தலைவர் ஹரிவன்ஸ் ஒத்திவைத்தார்.
அதன்பிறகு மீண்டும் இருசபைகளும் மதியம் 12 மணிக்கு கூடியது. அப்போதும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கூச்சலிட்டனர். இதையடுத்து ராஜ்யசபா, லோக்சபா ஆகியவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு மீண்டும் மதியம் 2 மணிக்கு சபை கூடியது. அப்போதும் எதிர்க்கட்சிகள் விடவில்லை. இருசபைகளிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷமிட்டனர். இதனால் மீண்டும் நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக ‛இந்தியா' கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சி எம்பிக்கள் அனைவரும் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல எம்பிக்கள் கருப்பு நிற உடை அணிந்து வந்திருந்தனர். ராகுல் காந்தி, சமாஜ்வாதியின் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்பட பலரும் கழுத்தில் கருப்பு துண்டு போட்டு இருந்தனர்.
#WATCH | Delhi: Opposition MPs, including Lok Sabha LoP and Congress MP Rahul Gandhi, hold protest against ongoing Special Intensive Revision (SIR) of electoral rolls in Bihar, in Parliament. pic.twitter.com/Z4ZT2Z7jjY
— ANI (@ANI) July 23, 2025
இந்த போராட்டத்தின்போது அவர்கள் பீகார் சட்டசபை தேர்தல் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போதைய சூழலில் பீகார் சட்டசபை தேர்தலுக்கான சிறப்பு திருத்த நடவடிக்கை மூலமாக 52 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
-
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
கேப்பில் கால் பதிக்கும் பாஜக! கேரளாவில் இடதுசாரிகள் vs காங்கிரஸ் கடும் போட்டி! புதிய சர்வே முடிவுகள் -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்? -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications